Advertisment

சென்னையில் இருந்து மதுரை, கோவை வரை - பண்டிகைக்கால சிறப்பு ரயில்கள்

பண்டிகைக்காகக் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக தெற்கு ரயில்வே சில சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சில செய்திக்குறிப்புகளை வெளியிட்டிருக்கிறது.

author-image
WebDesk
New Update
train booking irctc

train booking irctc

Festive Special Trains Tamil News: லாக் டவுனில் தளர்வுகள் செய்யப்பட்டிருந்தாலும், போக்குவரத்து சிக்கல்கள் இன்னும் இருக்கிறது. ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரிசையாக வரவிருப்பதால், அக்டோபர் 20 முதல் நவம்பர் 30 வரை, 392 திருவிழா சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக இந்திய ரயில்வே கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது.  மேலும்,பண்டிகைக்காகக் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக தெற்கு ரயில்வே சில சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சில செய்திக்குறிப்புகளை வெளியிட்டிருக்கிறது.

Advertisment

திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரலிலிருந்து மதுரை வரை செல்லும் ஏசி அதிவிரைவு சிறப்பு ரயில், வரும் 19-ம் தேதி இரவு 10.30-க்கு சென்ட்ரலிலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.20-க்கு மதுரை சென்றடையும். வண்டி எண் (06019).

அதேபோல செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதுரையிலிருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ஏசி அதிவிரைவு சிறப்பு ரயில், வரும் 20-ம் தேதி இரவு 10.45-க்கு மதுரையிலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.50-க்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். வண்டி எண் (06020).

சென்னை சென்ட்ரலிலிருந்து கோவை வரை செல்லும் சதாப்தி ரயில், வரும் 19-ம் தேதி முதல் இயக்கப்படும். இரவு 7.10 மணியளவில் சென்னையிலிருந்து புறப்படும் இந்த ரயில் சேவை செவ்வாய்க்கிழமை மட்டும் இருக்காது. வண்டி எண் (06027).

அதேபோல, 19-ம் தேதி முதல் கோவையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் சதாப்தி சிறப்பு ரயில், மதியம் 3.05 மணிக்குக் கோவையிலிருந்து புறப்படும். இதன் சேவை செவ்வாய்க்கிழமை இருக்காது. வண்டி எண் (06028).

Festive special trains from chennai to coimbatore madurai tamil news Festive special trains from Chennai to Coimbatore Madurai

கன்னியாகுமரி முதல் ஹவுரா வரை இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 24-ம் தேதி முதல் சனிக்கிழமைகளில் காலை 8 மணிக்குக் கன்னியாகுமரியிலிருந்து புறப்படும். வண்டி எண் (02666).

அதேபோல ஹவுராவிலிருந்து கன்னியாகுமரி வரை இயக்கப்படும் சிறப்பு ரயில், திங்கட்கிழமைகளில் மாலை 4.10 மணியளவில் ஹவுராவிலிருந்து புறப்படும். வண்டி எண் (02665).

சந்திரக்காச்சியிலிருந்து சென்னை சென்ட்ரல் வரையிலான சிறப்பு ரயில், வரும் 16-ம் தேதி முதல் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.05 மணிக்கு சந்திரகாச்சியிலிருந்து புறப்படும். வண்டி எண் (02807).

அதேபோல சென்னை சென்ட்ரலிலிருந்து சந்திரக்காச்சி வரையிலான சிறப்பு ரயில், வரும் 18-ம் தேதி முதல் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.10 மணிக்கு சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்படும். வண்டி எண் (02080).

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Rain In Tamilnadu Special Trains
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment