எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்: சேலம் இளங்கோவன் மீதான எஃப்.ஐ.ஆர் விவரம்

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன் மற்றும் அவருடைய மகன் ப்ரவீன்குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

FIR details against Elangovan, Elangovan Chairman of Tamilnadu state apex co-operative Bank, salem, edappadi palaniswami, எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர் இளங்கோவன், சேலம் இளங்கோவன், இளங்கோவன் மீதான எஃப்ஐஆர் விவரம், AIDMK, DVAC raid, DVAC raid at Salem Elangovan premises

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான 27 இடங்களில் இன்று (அக்டோபர் 22) காலை முதல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன் முன்னாள் முதல்வரும் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று அறியப்படுகிறார். இவர் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராகவும் உள்ளார். இளங்கோவன் மற்றும் அவருடைய மகன் ப்ரவீன்குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், சேலம், திருச்சி, சென்னை உள்ளிட்ட இளங்கோவனுக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

முருகன் என்பவர் அளித்த புகாரின் பேரில், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டிருப்பதாவது: இளங்கோவன், அவரைச் சார்ந்தவர்கள் பெயரில், 2014 -2020 வரை வருமானத்துக்கு பொருந்தாத வகையில், ரூ.3.78 கோடி சொத்துக்களை குவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Fir details against elangovan as chairman of tamilnadu state apex co operative bank

Next Story
காலாவதியான மருந்துகளை பயன்படுத்திய அதிமுக அரசு; பொதுக் கணக்குக்குழு ஆய்வில் அம்பலம்Tamil Nadu Tamil News: TN Public Accounts Committee founds Expired medicines  in Thanjavur used by previous AIADMK GOVT.
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com