பேக்கரி தீ விபத்தில் சிலிண்டர் வெடித்தது... தீயணைப்பு வீரர் பலி, 48-பேர் காயம்... முதல்வர் நேரில் ஆறுதல்

தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. . உயிரிழந்த தீயணைப்பு வீரரின் குடும்பத்தை சேர்ந்தவருக்கு அரசு வேலை வழங்கப்படும்

சென்னை கொடுங்கையூர் தீ விபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் பழனிசாமி ஆறுதல் கூறினார்.

சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் பேக்கரி ஒன்றில் நேற்றிரவு தீடீர் தீ விபத்து ஏற்பட்து. கடை பூட்டப்பட்டு இருந்த நிலையில், இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரவு 10 மணியளவில் பூட்டிய கடையில் இருந்து புகை வந்துள்ளது. இதைத் கண்ட அப்பகுதிமக்கள் அதிர்சியடைந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கர சத்தத்துடன் கடையில் இருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறியது. தீணை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த, தீயணைப்பு வீரர்கள் ஏகராஜ், பூபாலன், லட்சுமணன், ராஜதுரை, ஜெயபாலன் ஆகிய 4 பேரும் இதனால் படுகாயம் அடைந்தனர். அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ஆகியோரும் இந்த விபத்தில் சிக்கினர்.

fire accident, chennai

விபத்தில் பலர் காயமடைந்ததையடுத்து, போலீஸ் உயரதிகாரிகள் சம்பஇடத்திற்கு விரைந்தனர். மேலும், 10-க்கும் பேற்பட்ட ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் ஏகராஜ், பூபாலன், லட்சுமணன், ஜெயபாலன், ராஜதுரை ஆகிய 4 பேரும் அவசரம் அவசரமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் சிகிச்சை பலனின்றி ஏகராஜ் இன்று அதிகாலை  பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், போலீசார், ஊர்க்காவல் படையினர், பொது மக்கள் உள்ளிட்ட 48 பேர் இந்த விபத்தில் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 32 பேர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலும், 11 பேர் ஸ்டான்லி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

fire accident

இதனிடையே, கொடுங்கையூர் தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதரத்துறை செயலாளர் தெரிவித்தார்.

இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது: தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. காயம் அடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரரின் குடும்பத்தை சேர்ந்தவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று கூறினார்.

×Close
×Close