மீன்பிடி தடைக் காலத்தில் ரூ.500 நிவாரணம் வழங்கக் கோரி மனுத் தாக்கல்!

மீன் பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் நிவாரணம் வழங்க மனுத் தாக்கல்

மீன் பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் நிவாரணம் வழங்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மீன்களின் இனப்பெருக்கத்திற்கு என 45 மீன் பிடி தடை காலமாக அரசு அறிவித்துள்ளது.2017- 18 ஆம் ஆண்டு முதல் மீன் பிடி தடைக் காலத்தை ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்களாக அதிகரிக்க பட்டுள்ளது. இந்த மீன் பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கான நிவாரண தொகையை 2000 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக அதிகரித்து வழங்கி வருகின்றது.

இந்நிலையில் இது தொடர்பாக மீனவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் பீட்டர் ராயன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் மீன் படி தடை காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகின்றது. இந்த தொகை ஒரு நாளைக்கு 82 ரூபாய் மீனவர்களுக்கு நிவாரணமாக வழங்கப்படுகிறது. இந்த தொகையை வைத்து குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. என்பதால் ஒரு நாளைக்கு 500 ரூபாய் நிவாரணமாக வழங்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட விட வேண்டும். ஒவ்வொரு மீன் இனமும் வெவ்வேறு காலகட்டத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. மீன்பிடி தடைக்காலத்தில் மீன் வளம் அதிகரிக்கும் என்பதற்கு எந்த ஒரு அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை. மீன் பிடி தடைக்காலத்தில் நாட்டிற்கு அன்னிய செலாவணி இழப்பும் ஏற்படுகிறது. மேலும், மீனவர்களின் முதலிடுகளும் பாதிக்கப்படுகின்றது எனவே மீன் படி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கும் நிவாரண தொகையை தினந்தோறும் 500 ரூபாய் வழங்க மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

×Close
×Close