மீன்பிடி தடைக் காலத்தில் ரூ.500 நிவாரணம்: மத்திய மாநில அரசு பதிலளிக்க உத்தரவு

மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட கோரி மனுவிற்கு பதில் அளிக்க உத்தரவு

மீன் பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட கோரி மனுவிற்கு பதில் அளிக்க மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

மீன்களின் இனப்பெருக்கத்திற்கு என 45 மீன் பிடி தடை காலமாக அரசு அறிவித்துள்ளது.2017- 18 ஆம் ஆண்டு முதல் மீன் பிடி தடைக் காலத்தை ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்களாக அதிகரிக்க பட்டுள்ளது. இந்த மீன் பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கான நிவாரண தொகையை 2000 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக அதிகரித்து தமிழக அரசு வழங்கி வருகின்றது.

இந்நிலையில் இது தொடர்பாக மீனவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் பீட்டர் ராயன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில் மீன் படி தடை காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் மாநில அரசு வழங்கி வருகின்றது. இந்த தொகை ஒரு நாளைக்கு 82 ரூபாய் மீனவர்களுக்கு நிவாரணமாக வழங்கப்படுகிறது. இந்த தொகையை வைத்து மீனவர்களின் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. என்பதால் ஒரு நாளைக்கு 500 ரூபாய் நிவாரணமாக வழங்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட விட வேண்டும். ஒவ்வொரு மீன் இனமும் வெவ்வேறு காலகட்டத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. மீன்பிடி தடைக்காலத்தில் மீன் வளம் அதிகரிக்கும் என்பதற்கு எந்த ஒரு அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை. மீன் பிடி தடைக்காலத்தில் நாட்டிற்கு அன்னிய செலாவணி இழப்பும் ஏற்படுகிறது. மேலும், மீனவர்களின் முதலிடுகளும் பாதிக்கப்படுகின்றது எனவே மீன் படி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கும் நிவாரண தொகையை தினந்தோறும் 500 ரூபாய் வழங்க மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மவுரியா, மீன்படி தடை காலத்தில் அரசு சார்பில் வழங்குகின்ற நிவாரண தொகை மிக குறைவானது. இந்த தொகையில் மீனவர்களுக்கு குடும்பங்களை பராமரிப்பது கடினமான காரியம் எனவே தடை காலத்தில் நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் அரசு வழங்க வேண்டும் என்றார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு பிளிடர், ராஜகோபால், கடந்த 2008 ஆம் ஆண்டு வரை 2000 ஆயிரம் ரூபாயாக இருந்த நிவாரண தொகையை 5000 ரூபாயக உயர்த்தி தமிழக அரசு வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், தற்போதைய நிலைக்கு ஏற்ப குறைந்தது நாள் ஒன்றுக்கு100 ரூபாய் என வழங்கலாம் என கருத்து தெரிவித்தனர்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், மனு தொடர்பாக, தமிழக அரசு மத்திய அரசு ஆகியவை பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை வரும் 28 ஆம் தேதிக்கு ( ஏப்ரல் 28 ) தள்ளிவைத்தனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close