Advertisment

மாண்டஸ் புயல் பாதிப்பு: சென்னையில் 5 பேர் பலி

மாண்டஸ் புயலைத் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 5 பேர் உயிரிழந்தனர்.

author-image
WebDesk
New Update
சென்னை ரயில் நிலையத்தில் பெண் காவலர் சடலமாக மீட்பு: போலீசார் விசாரணை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. மாண்டஸ் எனப் பெயரிடப்பட்ட புயல் நேற்று முன்தினம் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. புயல் கரை கடந்த போது மணிக்கு 75 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சென்னையில் 694 மரங்கள் சாய்ந்ததாக அரசு தகவல் தெரிவித்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மற்றும் சனிக்கிழமை அதிகாலையில் மழை தொடர்பான சம்பவங்களால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மடிப்பாக்கம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர். தொரைப்பாக்கத்தில் ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். சைதாப்பேட்டையில் சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் மூளைச்சாவு அடைந்தனர்.

Advertisment

மடிப்பாக்கம்

ராம் நகர் 7-வது மெயின் ரோட்டில் வெள்ளிக்கிழமை இரவு தரையில் இருந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி 42 வயது பெண்ணும், அவரது உறவினர் 25 வயது நபரும் உயிரிழந்தனர்.

ஓலை வீட்டில் தங்கியிருந்த இருவரும், வீடு இடிந்துவிடுமோ என்ற அச்சத்தில் அருகில் உள்ள கார் ஷெட்டில் தஞ்சம் அடைய சென்றுள்ளனர். இரவு 9 மணியளவில், இருவரும் கார் ஷெட்டை அடைந்தனர், ஆனால் அவர்கள் பாய், தலையணை போன்ற பொருட்களை கொண்டு வர மறந்துவிட்டனர். இதையடுத்து லட்சுமி வீட்டிற்கு சென்று திரும்பும் வழியில் நிலத்தடி சந்திப்புப் பெட்டியில் இருந்து வெளியேறிய மின் கம்பியை மிதித்துள்ளார். அவரைக் காப்பாற்ற ராஜேந்திரன் முயன்றதில் இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் எனப் போலீஸார் தெரிவித்தனர்.

ஸ்ரீபெரும்புதூர்

வேலை முடித்து வீடு திரும்பிய இரண்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சனிக்கிழமை அதிகாலையில் மின்சாரம் தாக்கி உயரிழந்தனர். பீகாரைச் சேர்ந்த உறவினர்கள் சுதன் குமார்(25) மற்றும் நிரஞ்சன் குமார் (23) பிள்ளைப்பாக்கத்தில் தங்கி பணிபுரிந்து வந்த நிலையில், சாலையில் இருந்த பழமையான மரம் விழுந்து மின் கம்பி வயர் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது. இதை கவனிக்க தவறி அதன் மீது கால் வைத்ததில் மின்சாரம் தாக்கி இருவரும் உயிரிழந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.

தொரைப்பாக்கம்

தொரைப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஐடி ஊழியர் ஒருவர் இரவு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இரவு 10.30 மணியளவில், பலத்த காற்று வீசியதில் அலுவலகத்தில் இருந்த கண்ணாடி ஜன்னல் ஆடுவதை விஜயகுமார் கவனித்தார். ஜன்னலை மூட முயன்றபோது கண்ணாடி உடைந்து அவர் மீது விழுந்தது. உதவிக்கு யாரும் இல்லாததால் அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சைதாப்பேட்டை

வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு பெண்ணும் அவரது மூன்றரை வயது மகளும் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. நெருப்புமேடு பகுதியில் கணவர் கேசவ வேல்(40), மனைவி லட்சுமி( 35) மகள் கிர்த்திகா வசித்து வந்தனர். நள்ளிரவில், அருகிலுள்ள வீட்டின் பால்கனி சுவர் காற்றின் வேகத்தில் இடிந்து இவர்கள் வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் ஓட்டில் விழுந்ததில், லட்சுமி, மகள் கிர்த்திகா உயிரிழந்தனர். மருத்துவமனையில் இருவரும் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. கேசவ வேல் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment