/indian-express-tamil/media/media_files/2025/09/17/flagpole-case-2025-09-17-19-27-15.jpg)
Tamilnadu
/indian-express-tamil/media/media_files/2025/08/01/chennai-high-court-2x-2025-08-01-13-55-49.jpg)
பொது இடங்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகளின் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
/indian-express-tamil/media/media_files/2025/09/17/flagpole-2025-09-17-19-30-07.jpg)
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜராகி, கொடி கம்பங்களை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகளை தாக்கல் செய்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/09/17/tvk-flag-2025-09-17-19-30-30.jpg)
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவீந்திரன், கொடி கம்பங்கள் அமைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக மண்டல மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தாக்கல் செய்தார். மேலும், கொடி கம்பங்கள் வைப்பது குறித்து அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/09/madras-high-court-2-2025-07-09-21-54-14.jpg)
அந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி, நிகழ்ச்சிகளுக்காக கொடி கம்பங்கள் அமைக்கும்போது, சாலை நடுவில் உள்ள சென்டர் மீடியனில் வைக்கக் கூடாது. மேலும், 3 நாட்களுக்கு மேல் கொடி கம்பங்களை வைத்திருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
/indian-express-tamil/media/media_files/2025/09/17/images-2025-09-17-19-31-10.jpg)
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, கொடி கம்பங்கள் குறித்து அரசாணை வெளியிட்டு, வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ள தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த கட்டுப்பாடுகள் ஆளுங்கட்சி உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் பின்பற்றப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
/indian-express-tamil/media/media_files/In2adtJ7PPEHmYURPk63.jpg)
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார். வழக்கை அக்டோபர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us