திமுகவிற்கு மாறியும் அதிமுக மாஜி அமைச்சரை விரட்டிய ஊழல் வழக்கு – 5 ஆண்டு சிறை

ஊழல் வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 ஊழல் வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1991 – 96ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக் காலத்தில் சமூகநலத் துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. அப்போது, அவரது கணவர் பாபு நடத்தி வந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான அறக்கட்டளைக்கு அரசு சார்பில் ரூ.15.45 லட்சம்  நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்தத் தொகையில் எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை என கூறி புகார் எழுந்தது.


இதனையடுத்து, இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு, உதவியாளர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் சமூக நலத்துறையின் முன்னாள் செயலாளர் கிருபாகரன், ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் சண்முகம் ஆகிய 5 பேர் மீது  ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்பி ,எம்எல்ஏக்கள் வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.


இந்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த கிருபாகரன் இறந்துவிட்ட நிலையில், வெங்கடகிருஷ்ணன் வழக்கிலிருந்து விடுக்கப்பட்டார். 
இந்திரகுமாரி மற்றும் பாபுவுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், முன்னாள் அதிகாரி சண்முகத்துக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.


தீர்ப்பை கேட்டு அதிர்ச்சியடைந்த இந்திரகுமாரி, நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இந்திரகுமாரி, தற்போது திமுகவில் மாநில இலக்கிய அணிச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Former admk minister indirakumari sentenced to 5 years imprisonment

Next Story
பெண்களுக்கு ரூ1000 உதவித்தொகை: உள்ளாட்சி வேட்பாளர்களை துளைக்கும் மக்கள்!Ration cards, rs 1000 incentives for head women of family, local body elections, local body polls, dmk, aiadmk campaigns, dmk campaigns, kanimozhi, edappadi palaniswami, பெண்களுக்கு ரூ1000 உதவித்தொகை, உள்ளாட்சி வேட்பாளர்களை துளைக்கும் மக்கள், ஊரக உள்ளாட்சி தேர்தல், திமுக, அதிமுக, கனிமொழி, இபிஎஸ், ration cards apply, ration card online apply, tamil nadu, rs 100 incentives
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X