Advertisment

முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர்

அண்மையில், நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நிலையில், வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்த ராயபுரம் மனோ முதல்வர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
former congress leader royapuram mano, royapuram mano joined in aiadmk, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ, ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார், முதல்வர் பழனிசாமி, வடசென்னை, காங்கிரஸ், north madras, north chennai, cm edappadi k palaniswami, congress, aiadmk

அண்மையில், நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நிலையில், வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்த ராயபுரம் மனோ முதல்வர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.

Advertisment

வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ராயபுரம் மனோ. இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். அதற்குப் பிறகு அவர் எந்தவித அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார். பின்னர், இளைஞர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை வளர்க்கும் ஒரு மையத்தை இலவசமாக நடத்தி வந்தார்.

இந்த நிலையில், ராயபுரம் மனோ இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவரது முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

ராயபுரம் மனோ வடசென்னையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்து காங்கிரஸ் தலைவர்கள் மூப்பனார் தமாக தலைவர் ஜி.கே.வாசன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ், ஞானதேசிகன், கோபண்ணா ஆகியோருடன் நெருங்கிய நட்பில் இருந்தார். மேலும், அவர் காங்கிரஸ் கட்சியில் கவுன்சிலராக அகில இந்திய உறுப்பினராகவும் மாவட்ட தலைவராகவும் பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார்.

மனோவின் பணியை பல்வேறு சமயங்களில் ராகுல்காந்தி பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு உள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் ஏராளமான பொதுக் கூட்டங்களையும் உள்ளரங்கு கூட்டங்களையும் நடத்தியுள்ளார். தமிழ்நாடு ஆணழகன் சங்க மாநில தலைவராகவும் இருந்துள்ளார். இவரது மையத்தில் காமராஜர், காந்தி, நேரு பிறந்த நாட்களில் சாதனை புரிந்தவர்களுக்கு பாராட்டி பரிசுகளும் விருதுகளும் வழங்கியுள்ளார். இவரது மையத்தில் கட்சிக்கு அப்பாற்பட்டு பல்வேறு தலைவர்கள் வந்து சிறப்புரை ஆற்றி உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு, மனோ அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்த, நிலையில் இன்று அவர் அதிமுகவில் இணந்துள்ளார்.

அண்மையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த குஷ்பு, காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Chennai Aiadmk Edappadi K Palaniswami Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment