Advertisment

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு தமிழக பாஜகவில் பதவி

அண்மையில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை இன்று தமிழக பாஜகவில் மாநில துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
former ips annamalai, annamalai ips appointed as bjp state vice president, annamalai appointed as bjp stte vice presindent, அண்ணாமலை, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, அண்ணாமலைக்கு பாஜகவில் பதவி, பாஜக, annamalai got posting in bjp, bjp state vice president annamalai, l murukan, bjap state president l murugan

அண்மையில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை இன்று தமிழக பாஜகவில் மாநில துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

கர்நாடகா காவல்துறையில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை கடந்த ஆண்டு தனது ஐ.பி.எஸ் பணியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கரூர் மாவட்டத்தில் தனது சொந்த ஊரில் விவசாயம் செய்து வந்த அண்ணாமலை, அண்மையில் டெல்லி சென்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் மற்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அப்போது ஊடகங்களில் பேசிய அண்ணாமலை, தான் எதையும் எதிர்பார்த்து பாஜகவில் சேரவில்லை என்றும் பாஜகவில் உண்மையான விசுவாசமிக்க தொண்டனாக இருக்க விரும்புகிறேன் என்றும் கூறினார்.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி பாஜகவில் சேர்ந்த நாளில் இருந்து சமூக ஊடகங்களில் அவரைப் பற்றிதான் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கு என்ன பொறுப்பு என்று பலரும் விவாதித்தனர்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அண்மையில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலையை பாஜகவின் மாநில துணைத் தலைவராக நியமனம் செய்து அறிவித்துள்ளார்.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் சேர்ந்து 4 நாட்களில் மாநிலத் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment