அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.ராஜேந்திர பிரசாத் மரணம்: கட்சியினர் அஞ்சலி

கன்னியாகுமரியைச் சேர்ந்த முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.ராஜேந்திர பிரசாத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார். இவர் ஜெயலலிதா அமைச்சரவையில், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக இருந்தார்.

By: Updated: February 14, 2020, 08:57:44 PM

முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.ராஜேந்திர பிரசாத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார்.

கன்னியாகுமரியைச் சேர்ந்த கே.பி.ராஜேந்திர பிரசாத் (67) தமிழக சட்டப் பேரவையில் சட்டமன்ற உறுப்பினர், மீன்வளத்துறை அமைச்சர் என பதவிகளை வகித்தவர். ரஜேந்திர பிரசாத் 2001-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பாக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தமிழகசட்டப் பேரவையில் 2001-ம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவையில், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக இருந்தார். ஒரு ஆண்டு அமைச்சரவையில் இருந்த அவர் பின்னர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

2006, 2011 சட்டப் பேரவை தேர்தல்களில் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தொடர்ந்து அதிமுகவில் இருந்து வந்தார்.

ராஜேந்திர பிரசாத்துக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டி நோய் காரணமாக கடந்த ஜனவரி 26-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த ராஜேந்திர பிரசாத் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மனைவி அல்போன்சா, மகன் தினேஷ் குமார், மகள் அனிதா உள்ளனர்.

மறைந்த முன்னாள் அமைச்சர் கே.பி.ராஜேந்திர பிரசாத் உடலுக்கு அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Former minister kp rajendra prasad passes away

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X