Advertisment

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் மரணம்; தலைவர்கள் இரங்கல்

பொது இடங்களில் புகைப்பிடிக்கக் கூடாது என்ற சிறப்பு வாய்ந்த தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 78.

author-image
WebDesk
New Update
former supreme court judge ar lakshmanan nomore, உச்ச நிதிமன்ற முன்னாள் நீதிபதி ஏஆர் லட்சுமணன் மரணம், முன்னாள் நீதிபதி ஏஆர் லட்சுமணன் காலமானார், தயாநிதி மாறன் இரங்கல், கவிஞர் வைரமுத்து இரங்கல், former justice ar lakshmanan passes away, justice ar lakshmanan passes away at 78 age, sivagangai district, devakottai, justice lakshmanan death, dayanidhi maran condolence to justice ar lakshmanan, poet vairamuthu condolence

பொது இடங்களில் புகைப்பிடிக்கக் கூடாது என்ற சிறப்பு வாய்ந்த தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 78.

Advertisment

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன். இவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, இந்தியாவில் பொது இடங்களில் புகைபிடிக்கக் கூடாது என்ற சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கினார். முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் சட்ட ஆணையத்தின் தலைவராகவும் முல்லைப் பெரியாறு ஆய்வுக் குழுவிலும் இடம் பெற்றிருந்தார். இவருக்கு ஏ.ஆர்.எல்.அருணாச்சலம், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் என 2 மகன்களும் உமையாள், சொர்ணவள்ளி என 2 மகள்களும் உள்ளனர். இதில் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞராகவும், சென்னை பார் அசோசியேஷன் தலைவராகவும் உள்ளார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வசித்து வந்தார். அவருக்கு முதுமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்க திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது, உடல் சொந்த ஊரான தேவகோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் மனைவி மீனாட்சி ஆச்சி சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக காரைக்குடியில் காலமானார். அவரது உடல் தேவைக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனும் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் மறைவுக்கு திமுக எம்.பி. தயாநிதி மாறன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திமுக எம்.பி.தயாநிதிமாறன், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தமிழ் ஆர்வலருமான ஏ.ஆர்.லட்சுமணன் மறைந்துவிட்டார் என்றார் செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக கூறி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தயாநிதிமாறன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், “உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தமிழ் ஆர்வலருமான ஏ.ஆர். லட்சுமணன் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன், அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து, “ஏ.ஆர்.லட்சுமணன் மறைந்தாரே! நீதிமன்றத்தின் நெடுந்தூண் சாய்ந்ததே!” என்று இரங்கல் தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்,

“நீதியரசர்

ஏ.ஆர்.லட்சுமணன் மறைந்தாரே!

நீதிமன்றத்தின்

நெடுந்தூண் சாய்ந்ததே!

தமிழர்களின்

இந்திய அடையாளம் அழிவுற்றதே!

கலைஞர் வெளியிடக்

கருவாச்சி காவியம்

முதற்படி பெற்ற பெருமகனாயிற்றே!

இனி எங்கு பெறுவோம்

அவர் போலொரு தங்கச் சிங்கத்தை!

அனைவர்க்கும்

என் அழுகை இரங்கல்.” என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil
Tamil Nadu Sivagangai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment