Advertisment

மது அருந்திய 4 கல்லூரி மாணவிகள்; வீடியோ வெளியானதால் வேதனை!

நாகப்பட்டினம் மாவட்டத்தில், கல்லூரி மாணவிகள் 4 பேர் ஆண் நண்பருடன் சேர்ந்து மது அருந்தியபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
four college girls alcohol drinks video, மது அருந்திய கல்லூரி மாணவிகள், college girls alcohol drinks, four girls alcohol drinks with boyfriend, college girls drinks alcohol, மது அருந்திய மாணவிகள், pmk founder ramadoss condemn

four college girls alcohol drinks video, மது அருந்திய கல்லூரி மாணவிகள், college girls alcohol drinks, four girls alcohol drinks with boyfriend, college girls drinks alcohol, மது அருந்திய மாணவிகள், pmk founder ramadoss condemn

நாகப்பட்டினம் மாவட்டத்தில், கல்லூரி மாணவிகள் 4 பேர் ஆண் நண்பருடன் சேர்ந்து மது அருந்தியபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில், கல்லூரி மாணவிகள் 4 பேர் வட்டமாக சுற்றி அமர்ந்து கையில் பீர் பாட்டில்களை வைத்துக்கொண்டு குடிக்கின்றனர். அவர்களுடன் ஒரு இளைஞரும் மது அருந்துகிறார். அவர்களுக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள சைடிஷ்ஷாக ஸ்நாக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. அந்த 4 மாணவிகளில் 2 மாணவிகள் யூனிஃபார்மில் உள்ளனர். ஒரு மாணவி கையில் ஸ்நாக்ஸுடன் பீர் பாட்டிலை பற்களால் கடித்து திறக்கிறார்.

அதே நேரத்தில், அந்த அறையில் வேறு சில பெண்களும் இருப்பது வீடியோவில் தெரிகிறது. அப்போது எடுக்கப்பட்ட வீடீயோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடீயோ வைரலாகி வேகமாக பரவியதால், சம்பந்தப்பட்ட மாணவிகள் படிக்கும் மாணவிகள் படிக்கின்ற கல்லூரி நிர்வாகத்துக்கும் தெரியவந்ததால், அந்த மாணவிகளை கல்லூரியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ வெளியானதால் வேதனை அடைந்த மாணவி ஒருவர் கல்லூரியின் நடவடிக்கையால் மேலும் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், மாணவிகள் மது அருந்திய வீடியோ விவகாரம் மேலும் சர்ச்சையாகி உள்ளது.

தமிழகத்தில் மதுவால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பாக ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று மது விற்பனைக்கு எதிராக 4 ஆண்டுகளுக்கு முன்பு போராட்டங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, அதிமுக தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது.

மதுபான விற்பனைக் கடைகள் குறைந்தபோதிலும் மதுவிற்பனையின் அளவு மட்டும் குறையாமல் அதிகரித்து வருகிறது. இதனால், இளைஞர்கள், மாணவர்கள் என பலரும் மது அருந்தும் சம்பவங்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால், இப்போது, மாணவிகள் மது அருந்திய சம்பவம் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் டுவிட்டரில் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தருமபுரம் ஆதீன கல்லூரி மாணவிகள் 4 பேர் மது அருந்திய காணொலி வெளியானதும், அதற்காக அவர்கள் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. நாட்டின் வருங்காலத் தூண்களை மது எவ்வாறு சீரழிக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் தேவையில்லை!

திரும்பிய திசையெல்லாம் மது தாராளமாக கிடைப்பது தான் மாணவிகள் மது அருந்துவதற்கு காரணம் ஆகும். சிறுவர்கள் கூட சீரழிவதற்கு தெருவெங்கும் மதுக்கடைகள் இருப்பது தான் காரணம். நாட்டையும், வீட்டையும், உடல்நலத்தையும் காக்க தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான் ஒரே தீர்வு” என்று வலியுறுத்தியுள்ளார்.

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment