Advertisment

மெடிக்கல் கவுன்சலிங்: சென்னை சென்ற 4 மாணவர்களுக்கு கொரோனா உறுதி

கலந்தாய்வில் கலந்து கொண்ட மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று அறிகுறிகள் இருந்தால், அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் இயக்குநரகம் கூறியது.

author-image
WebDesk
New Update
TNUSRB answer key, students

TNUSRB answer key

4 Students tested Covid 19 positive in Medical Counselling : கடந்த புதன்கிழமை சென்னையில் நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் பங்குபெற்ற நான்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கோவிட்-19 பாசிட்டிவ் முடிவு வந்திருப்பதாக மருத்துவ கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. இது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட விழாவாக இருந்ததால் கோவிட் பரிசோதனை முன்னெச்சரிக்கையாகச் செய்யப்பட்டது.

Advertisment

இந்த மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்ட அனைத்து 262 மாணவர்களுக்கும், ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளைத் தேர்வுக் குழு நடத்தியது.

"பாசிட்டிவ் முடிவுகள் பெற்ற நான்கு பேரும் அறிகுறியற்றவர்கள் மட்டுமின்றி ஆரோக்கியமாகவும் இருந்தனர். முதல்வர் கையிலிருந்து அட்மிட் கார்டுகளை நேரடியாகப் பெற்ற 18 மாணவர்களில் அவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு தற்செயலான கண்டுபிடிப்பு. என்றாலும்கூட, நாங்கள் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளோம். இந்த மாணவர்களைத் தனிமைப்படுத்தும்போது, அவர்களின் நெருங்கிய தொடர்புகளும் சோதிக்கப்படும்" என்று மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர் நாராயணபாபு தெரிவித்தார்.

மேலும், கலந்தாய்வில் கலந்து கொண்ட மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று அறிகுறிகள் இருந்தால், அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் இயக்குநரகம் கூறியது.

கடந்த வியாழக்கிழமை, கலந்தாய்வு நடைபெற்று வரும் ஜவஹர்லால் நேரு உட்புற ஸ்டேடியத்தில் ஆர்டிபி-சிஆர் சோதனைகள் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெர்மல் ஸ்கேனர்கள் வழியாக நடக்கச் செய்து, சோப் உபயோகித்து கைகளைக் கழுவவும், சானிடைசர்களை பயன்படுத்தவும், மாஸ்க்குகளை அணியவும், சமூக தூரத்தை எல்லா நேரங்களிலும் பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Tamilnadu Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment