கொரோனா நெருக்கடியை தமிழகம் எப்படி எதிர்கொள்கிறது?

கேரளாவைப் போலல்லாமல், இங்கு அதிகாரிகளே தொடர்பை தடமறிதல் பணிகளை மேற்கொண்டனர். தப்லிக் ஜமாத் விவகாரத்தை வகுப்புவாத நோக்கங்களுக்காகப் பயன்படுத்த சிலர் முயன்றதால், சமூக ஊடகங்களில் உறுப்பினர் தொடர்பான தகவலை நாங்கள் வெளிபடையாக பகிர வில்லை

எர்பல் மாத நடுப்பகுதியில், எண்ணிக்கை அளவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து, மிகவும் மோசமாக பாதித்த மாநிலங்களில் ஒன்றாக  தமிழகம் இருந்தது. அதன், 38 மாவட்டங்களில் 37 மாவட்டங்கள் கொரோனா தொற்றை பதிவு செய்தன. இருப்பினும், அதன் பிறகு தமிழகம் கொரோனா பெருந்தொற்றின் கோர பிடியில் இருந்து மெல்ல நகரத் தொடங்கியது. மாநிலத்தின் மக்கள் தொகை கிட்டதட்ட குஜராத்தை ஒத்தியிருந்தாலும், குஜராத் கொரோனா தொற்றின் மொத்த எண்ணிக்கையில் பாதியாகத் தான் தமிழகத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் கொரோனா இறப்பு விகிதம், குஜராத்தின் எட்டின் ஒரு பகுதியாகும்.

உறுதி செய்யப்படும் புது கொரோனா தொற்றுகள்  தமிழகத்தின் ஐந்து-ஆறு மாவட்டங்களில் இருந்து தான் பதிவாகின்றன. ஒரு காலத்தில் அதிக தொற்றைக் கொண்டிருந்த கோயம்புத்தூர் மாநகராட்சி, கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யாமல் தடுப்பு நடவடிக்கையில் முன்னேற்றம் காண்கின்றது.

திடீரென்று கொரோனா தொற்று அதிகரித்த பின்பு, எண்ணிக்கையை ஒப்பீட்டளவில் குறைவாக வைத்திருக்க (வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி – 2,526 வழக்குகள், 28 இறப்புகள்) அரசுக்கு உதவியது அதன் சுகாதார வலையமைப்பாகும். 1950-களில் இருந்து  ஆட்சி அதிகாரம் கட்சிகளுக்கிடையே மாறினாலும், மக்கள் நலக் கொள்கை தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக, தரமான மற்றும் அனைவராலும்  அணுகக் கூடிய சுகாதார சேவையை  தமிழகம் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு பயணம் செய்த மத்திய குழு, தமிழகத்தில் குணமடைதல் விகிதம் 54 சதவீதமாக இருப்பதை நினைத்து திருப்தியடைந்தது. மேலும், தமிழ்நாட்டின்  இறப்பு விகிதம், 1.2%, ஆக உள்ளது. இது இந்தியாவின் இறப்பு விகித்தில் பாதிக்கும் குறைவானதாகும்.  (சுமார் 3%).

மாநிலத்தில் 25 அரசு மருத்துவ கல்லூரிகள் செயல்படுகின்றன. மேலும், பல்வேறு மாவட்டங்களில் 11 புது மருத்துவ கல்லுரிகள்  கட்டப்பட்டு வருகின்றன. தமிழகத்தின், பேறுகால தாய் – சேய் இறப்பு விகிதம் 16 ஆகும்.  ஆந்திரா மற்றும் குஜராத் மாநிலங்களில் இந்த விகிதம் முறையே  32,30 ஆக உள்ளது. ஆந்திரா (13) மற்றும் குஜராத்தின் (11) குழந்தை இறப்பு விகிதத்தை ஒப்பிடுகையில் தமிழகத்தில் இறப்பு விகிதம் 2 ஆக உள்ளது.  பக்கத்தில் இருக்கும்  கேரளா மட்டுமே இந்த முக்கிய சுகாதார குறியீடுகளில் சிறந்த மாநிலமாக இருக்கலாம்.

சீனாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பான செய்திகள் வெளியான பின்பு, ஜனவரி இறுதி வாரங்களில் தமிழகம் விமான நிலையங்களில் நோய் தடுப்பு நடவடிக்கையை முடக்கிவிட்டது. கேரளாவைப் போலவே, தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய புலம்பெயர்ந்தோரைக் கொண்ட தமிழகம், விமான நிலையங்களில்  பயணிகளைத் ஸ்க்ரீனிங் செய்வதில் அதிகம் கவனம் செலுத்தியது.

மார்ச் 7 அன்று ஓமானில் இருந்து திரும்பிய  பொறியியலாளர் மூலம், தமிழகம் தனது முதல் கொரோனா வைரஸ் தொற்றை பதிவு செய்தது. அதன் இரண்டாவது வழக்கு, மார்ச் 18 அன்று, உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ரயில் பயணத்தின் மூலம்  தமிழகம் வந்த ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி. இவரின் நோய் தொற்றுக்கு காரணம் என்ன? ரயிலில் இவரோடு பயணித்தவர்கள் யார்? யார் மூலம் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது? இவரோடு தொடர்பில் இருந்தவர்கள் யார்?  போன்ற கேள்விகள்  அரசு நிர்வாகத்துக்கு பெரும் சவால்களாக இருந்தன. இரண்டாவது நோயாளி தொடர்பான அனைத்து கேள்விக்கான பதிலும், மாநில அரசுக்கு எட்டாக் கனவாக மாறின.

எனினும்,மாநிலத்தை  உண்மையாக அதிர்ச்சிக்குள்ளாக்கியதும், நோய் தொற்றின் எண்ணிக்கையை உயர்த்தியதும் டெல்லி தப்லிகி ஜமாத் மாநாடு தொடர்பான செய்தி தான். ஒரு கட்டத்தில், மாநிலத்தின் 90% கொரோனா தொற்று பதிவுகள்  தப்லிகி ஜமாத்துடன் தொடர்புடையவை. அந்த விகிதம் தற்போது 60% ஆக குறைந்துள்ளது.  இந்தியாவின் மிகப்பெரிய காய்கறி சந்தையாக கருதப்படும் சென்னை கோயம்பேடு சந்தை, தற்போது மாநிலத்தின் கொரோனா பரவலின் மையமாக உருவாகி வருகிறது.

கண்காணிப்பு மற்றும் தொடர்ச்சியான திட்டமிடல் காரணமாக பரவல் எண்ணிக்கையை குறைந்ததாக மாநில சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். பொது சுகாதாரத் துறையில் பணியாற்றும் அனைவரும் இந்த  அவசர காலத்தில் ஒன்றினைத்ததோம், என்றும் அவர் தெரிவித்தார்.

மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “டெல்லி  தப்லிக் ஜமாத் மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருக்கலாம் என்ற  மதிப்பீட்டின் பின், நாங்கள்  விரைவாக செயல்பட்டோம். நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, மாவட்டம் அளவில் விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. சென்னையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் தபலிக்  ஜமாத் உறுப்பினர்களின் தொடர்பு தடமறிந்தோம். பெரும்பாலான உறுப்பினர்கள் தானாக முன்வது ஒத்துழைப்பு அளித்தனர்” என்றார்.

கேரளாவைப் போலல்லாமல், இங்கு அதிகாரிகள் மட்டத்தில் தொடர்பு  தடமறிதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  இந்த விவகாரத்தை வகுப்புவாத நோக்கங்களுக்காகப் பயன்படுத்த சிலர் முயன்றதால், நாங்கள் நேரடியாக மக்களைப் பயன்படுத்தவில்லை. சமூக ஊடகங்களில் உறுப்பினர் தொடர்பான தகவலை நாங்கள் வெளிபடையாக பகிரவில்லை. நாங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்தோம், சமூகத் தலைவர்களின் உதவியை நாடினோம்” என்று தெரிவித்தார்.

 

மாநிலத்தில் சிக்கித்தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கூட்டமாக வெளியேறமால் தடுத்தது சிறந்த உதவியாக அமைந்தது என்று மாநிலத்தின் மூத்த செயலாளர் ஒருவர் தெரிவித்தார். அவர்களுக்கான தங்குமிடம் மற்றும் உணவை உள்ளாட்சி அமைப்புகள் விரைவுபடுத்தின என்றும் தெரிவித்தார்.

1.18 லட்சம இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக, மாநிலத்தில் 576 சமூக சமையலறைகள் இயங்கி வருகின்றன . 245 அம்மா உணவகம் மூலம், சராசரியாக 3.12 லட்சம் மக்களுக்கு உணவளிக்கப்படுகிறது.

தமிழகத்தின் உறுப்பு தான செயல்முறை உலகளவில் சிறந்து விளங்குவதற்கு முக்கிய காரணியான மருத்துவ நிபுணர் அமலர்பவநாதன் ஜோசப், மாநிலத்தின் பொது சுகாதார அமைப்பு, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சமூக சுகாதார வலைப்பின்னல்களை பாராட்டினார்.

எவ்வாறாயினும், ஊரடங்கு தொடர்பாக  சில தற்காலிக  குழப்ப நடவடிக்கைகளை தவிர்த்திருக்கலாம். மோசமான பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து குறித்து ஊழியர்களிடமிருந்து வரும் புகார்களுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்தார்.

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின்  முன்னாள் தலைவரான டாக்டர் ஆர்.ராமகிருஷ்ணன் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் நிபா வைரஸ் நோயைக்  கையாள்வதில் இருந்து பெறப்பட்ட அனுபவத்தின் மூலம், இந்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தமிழகத்தை விட கேரளா சிறந்து விளங்குவதாக தெரிவித்தார்.

ஐ.எல்.ஐ. (இன்புளூயன்ஸா போன்ற உடல்நலக் குறைபாடு) மற்றும் சாரி (தீவிர மூச்சுத் திணறல் உடல் நலக் குறைபாடு போன்ற நோய்களை கண்காணிப்பதில் கேரளா, தமிழ்நாடு ஆகிய இரண்டும்  மாநிலங்களும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்று தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தின் முன்னாள் இயக்குநர் டி.சுந்தரராமன் தெரிவித்தார்

109  நோயாளிகள் இன்னும் கவலைக்குரியவையாக உள்ளன.  அவற்றின் தொற்றுக்கான  காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை . இப்போது SARI மற்றும் ILI இல் கவனம் செலுத்துவதாகக் சுகாதார செயலாளர் ராஜேஷ் தெரிவித்தார். “மார்ச் முதல் இதுபோன்ற வழக்குகளை நாங்கள் கவனித்து வருகிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறோம், ” என்றார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: From worst hit states around mid april how tamilnadu rode the covid 19 crisis

Next Story
தமிழகம் முழுவதும் இன்று பந்த்…! வெற்றிப் பெறுமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express