Advertisment

கஜ புயல் எதிரொலி : 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை !

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
today weather updates

today weather updates

கஜ புயல் பள்ளிகளுக்கு விடுமுறை : இன்று அதிகாலையில் கரையைக் கடந்தது கஜ புயல். அதி வேகமாக புயல் காற்று வீசிவருவதாலும், பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதாலும் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

Advertisment

கஜ புயல் பள்ளிகளுக்கு விடுமுறை :

கனமழையின் எதிரொலியால் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறைகள் அளிக்கப்பட்டிருக்கிறது. மதுரை, விருதுநகர் திருச்சி, கோவை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அறிவித்திருக்கிறார்கள் மாவட்ட ஆட்சியர்கள்.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

அரியலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. அதே போல் சிவகங்கை மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, தேனி, திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.  கஜ புயல் தொடர்பான Live updates படிக்க

Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment