கஜ சீரமைப்புப் பணி: உயிரிழந்த மின் பணியாளர்கள் குடும்பங்களுக்கு தலா 15 லட்ச ரூபாய் நிவாரணம்

‘கஜா’ புயலால் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும்போது உயிரிழந்த மின் பணியாளர்கள் இருவரின் குடும்பங்களுக்கு தலா 15 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், “16.11.2018 அன்று அதிகாலை ‘கஜா’ புயல் நாகப்பட்டினம் மாவட்டம் அருகே 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்த போது, டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயின. தமிழக அரசு எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் […]

கஜ சீரமைப்புப் பணி: உயிரிழந்த மின் பணியாளர்கள் குடும்பங்களுக்கு தலா 15 லட்ச ரூபாய் நிவாரணம்
கஜ சீரமைப்புப் பணி: உயிரிழந்த மின் பணியாளர்கள் குடும்பங்களுக்கு தலா 15 லட்ச ரூபாய் நிவாரணம்

‘கஜா’ புயலால் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும்போது உயிரிழந்த மின் பணியாளர்கள் இருவரின் குடும்பங்களுக்கு தலா 15 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், “16.11.2018 அன்று அதிகாலை ‘கஜா’ புயல் நாகப்பட்டினம் மாவட்டம் அருகே 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்த போது, டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயின. தமிழக அரசு எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவு உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டன. எனினும், புயலின் தாக்கத்தினால், கால்நடைகள், வீடுகள், பயிர்கள், மின்கம்பங்கள் பெருமளவில் சேதம் அடைந்தன.

புயலின் கடுமையான தாக்கத்தினால் 1 லட்சத்து 13,566 மின் கம்பங்கள், 1,082 மின் மாற்றிகள், 194 துணை மின் நிலையங்கள் சேதமடைந்தன. இரவு பகல் பாராது, தங்கள் உயிரையும் துச்சம் என நினைத்து, சேதமடைந்த மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களை சீர் செய்யும் பணியில் சிறப்பாக ஈடுபட்டிருக்கும் 24,941 மின்வாரிய ஊழியர்களின் பணியினை நான் மனதார பாராட்டுகிறேன், அவர்களது பணி மெச்சத்தக்கது.

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், கோகூர் கிராமத்தைச் சேர்ந்த வயர்மேன் சண்முகம், 16.11.2018 அன்று மின் கம்பங்களை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

20.11.2018 அன்று புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், களமாவூர் கிராமத்தில், மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 23.11.2018 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

‘கஜா’ புயலின் தாக்கதினால் சேதமடைந்த மின் கம்பங்களை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சண்முகம் மற்றும் முருகேசன் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மின்கம்பம் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சண்முகம் மற்றும் முருகேசன் ஆகியோரின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு, சிறப்பினமாக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 13 லட்சம் ரூபாயும்; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாயும் என மொத்தம் தலா 15 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், உயிரிழந்த சண்முகம் மற்றும் முருகேசன் ஆகியோரின் குடும்பத்தினர் தலா ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு நிறுவனத்தில் வேலை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்” என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Gaja recover process 15 lakh relief fund cm palanisamy

Next Story
அடுத்த மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா?…தமிழ்நாடு வெதர்மேன் பதில்!மழை நிலவரம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express