திமுக ஊழல் பட்டியல்- விஜிலென்ஸ் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு
திமுக ஊழல் புகார்களை விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் முழுங்கி ஏப்பம் விட்டு விட்டு அப்படியே வைத்துள்ளார்கள் என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை பேரூர் பகுதியில் நடைபெறும் நொய்யல் திருவிழாவின் 5ம் நாள் நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
Advertisment
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது;
மத்திய அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளார்கள். LPG சிலிண்டர் விலை குறைப்பு அனைத்து மக்களுக்கும் வரப்பிரசாதமாக அமையும்.
கோவையில் ஒரு பக்கம் விமான நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது, கிட்டத்தட்ட நிலம் கையகப்படுத்தும் பணிகள் 100% முடிக்கப்பட்டுள்ளது. அதற்கான இழப்பீடுத் தொகையும் மக்களுக்கு கொடுக்கும் பணிகள் நடைபெற்ற வருகிறது.
அம்ருத் ரயில் நிலையத்தில் கோவை ரயில் நிலையம் இல்லை என்று பலரும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கான கேள்வியை நாங்கள் ரயில் நிலைய அதிகாரிகளிடம் முன் வைக்கும் பொழுது அந்த அதிகாரிகள், கோவையில் இருந்து 34 ரயில்களின் புறப்படுகிறது, 96 ரயில்கள் கோவை வழியாக செல்கிறது, கோவையில் புதிதாக ரயிலை இயக்குவதற்கு இடம் கிடையாது, என தெரிவித்தனர்.
அப்படி இருந்தும் நாம் வந்தே பாரத ரயிலை கோவைக்கு இயக்கியுள்ளோம். எனவே கோவைக்கு அருகில் உள்ள போத்தனூர் ரயில் நிலையத்தை அம்ருத் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யும் பணியை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.
என் மண் என மக்கள் முதல் கட்ட பாதயாத்திரையை மிகவும் கடுமையாக இருந்தது. தென் தமிழகத்தில் பாஜக வேரூன்றி இருக்கிறது. அதே சமயம் அதிகமான பிரச்சனைகளும் தென்தமிழகத்தில் உள்ளது.
தென்காசியில் செப்டம்பர் 4ம்தேதி இரண்டாம் கட்ட பாதயாத்திரை துவங்கி 19ஆம் தேதி கோவைக்கு வந்து விடுவோம்.
திமுக ஊழல் பட்டியலை பொருத்தவரை ஒரு முறை நேரடியாக வழங்கினோம் அடுத்த கவர்னரிடம் வழங்கிவிட்டு முக்கியமானவற்றை வெளியிட்டோம். அடுத்த முறை CBI விசாரணை கூட கேட்கலாம். DVAC நாங்கள் அளித்த 6 புகார்களை முழுங்கி ஏப்பம் விட்டு விட்டு அப்படியே வைத்துள்ளார்கள்.
சீமான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டு கொள்ளட்டும். அவர் போட்டியிட்டு தோற்க தானே போகிறார். சீமான் மீது எனக்கு மதிப்புள்ளது. ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்த பிறகு எங்கு போட்டியிட்டால் என்ன?.
திமுகவில் அதிகமான ஊழல்வாதிகள் இருக்கிறார்களே அவர்களை எதிர்த்து சீமான் போட்டியிடட்டுமே, பிரதமர் என்ன ஊழல் செய்தார்?. சீமான் திமுகவினரை எதிர்த்து வெற்றி பெற வேண்டுமே தவிர நல்லது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற மோடியை எதிர்த்து எதற்கு போட்டியிட வேண்டும்? எனக் கேள்வி எழுப்பினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“