Advertisment

கன்னியாகுமரி கிராம்புக்கு புவிசார் குறியீடு: லேட்டஸ்ட் அறிவிப்பில் இடம்பெற்ற பொருட்கள் பட்டியல்

geographical Indications (GI) tags issued by the Chennai registry for 51 new products including a German beer, Italian cheese Tamil News: ஜெர்மன் பீர் (மன்செனர் பியர்), இத்தாலிய நரம்பு நீல பாலாடைக்கட்டி (கோர்கோன்சோலா), கிரேக்கத்தின் தாவர பிசின் (சியோஸ் மஸ்திஹா) மற்றும் செக் குடியரசின் விதைக் கூம்பு (ஜடெக்கி க்மெல்) உள்ளிட்ட 51 பொருட்களுக்கு தமிழகம் சார்பில் புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
geographical Indications Tamil News: GI tags issued by the Chennai registry for 51 new products

Geographical Indications Tamil News: ஓரிடத்தில், பாரம்பரியமாக உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்கள், இயற்கை பொருட்கள், கைவினைப் பொருட்கள் போன்றவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இது உற்பத்தி செய்யப்படும் இடத்தின் பெருமைக்கும், பொருட்களின் பாரம்பரியத்திற்கும், உயர்ந்த தரத்திற்கும் சான்றாக விளங்குகிறது.

Advertisment

அந்த வகையில் தமிழகத்தின் மதுரை மல்லிகை, காஞ்சி பட்டு, பவானி ஜமக்காளம், நீலகிரி தேயிலை, தஞ்சை ஓவியங்கள், திண்டுக்கல் பூட்டு, ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் மலைபூண்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, காரைக்குடி கண்டாங்கி சேலை, பழனி பஞ்சாமிர்தம் ஆகிய பொருட்கள் புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்று உள்ளன. மேலும் தமிழகத்தை சேர்ந்த பல பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜெர்மன் பீர், இத்தாலிய சீஸ் உள்ளிட்ட 51 பொருட்களுக்கு தமிழகத்தின் சார்பாக புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புவிசார் குறியீடு அங்கீகாரத்திற்காக குறைந்தது 4 மேற்கத்திய நாடுகள் 12 தயாரிப்புகளுக்கு சென்னை அலுவலகத்தில் விண்ணப்பங்களை தாக்கல் செய்திருந்தன.

இதில் ஜெர்மன் பீர் (மன்செனர் பியர்), இத்தாலிய நரம்பு நீல பாலாடைக்கட்டி (கோர்கோன்சோலா), கிரேக்கத்தின் தாவர பிசின் (சியோஸ் மஸ்திஹா) மற்றும் செக் குடியரசின் விதைக் கூம்பு (ஜடெக்கி க்மெல்) உள்ளிட்ட 51 பொருட்களுக்கு தமிழகம் சார்பில் புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கும் அமைப்பின் இணையப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த 2018 முதல் சில தயாரிப்புகளின் புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்குவது இன்னும் நிலுவையில் உள்ளதால், புவிசார் குறியீடு வழங்கும் உயரதிகாரிகள் அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களிடம் 'தனிப்பட்ட முறையில்' சான்றிதழ்களை ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த பட்டியலில், கைவினைப்பொருட்கள் முதல் விவசாய பொருட்கள் வரை 421 தயாரிப்புகளுக்கு இந்தியாவில் புவிசார் குறியீடு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா தலா 43 தயாரிப்புகளுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் வழக்கறிஞர் மற்றும் புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்க நியமிக்கப்பட்ட நோடல் அதிகாரி பி.சஞ்சய் காந்தி இதுவரை 25 தயாரிப்புகளுக்கான புவிசார் குறியீடு குறிச்சொற்களைப் பெற்றுள்ளார்.

இதில், கன்னியாகுமரி கிராம்பு, தஞ்சாவூர் நெட்டி வேலைகள், கருப்பூர் கலம்கரி ஓவியங்கள் மற்றும் அரும்பாவூர் மற்றும் கள்ளக்குறிச்சியின் மர வேலைப்பாடுகள் ஆகிய ஐந்து பொருட்களும் உள்ளடங்கும். தவிர, சேலம் மாம்பழம், மதுரை மரிக்கொழுந்து மயிலாடி (கன்னியாகுமரி) சிலை மற்றும் மணப்பாறை முறுக்கு போன்ற பொருட்களுக்கு தமிழகத்தின் சார்பாக தாக்கல் செயப்பட்டுள்ள விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Tamilnadu News Update Tamilnadu News Latest Geographical Indication Tag
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment