Advertisment

ஸ்டாலின் தமிழகத்திற்கு வேண்டாம்... ட்விட்டரில் ட்ரெண்டாகும் #GoBackStalin

நீ நாட்ட விட்டு போன உடனே நல்ல மழை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஸ்டாலின் தமிழகத்திற்கு வேண்டாம்... ட்விட்டரில் ட்ரெண்டாகும் #GoBackStalin

லண்டன் சென்று  சென்னை திரும்பவுள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலினை எதிர்க்கும் வகையில் #GoBackStalin என்ற ஹாஷ்டேக்  ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

Advertisment

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கடந்த 9 ஆம் தேதி இரவு தனது துணைவியார் உடன் லண்டன் புறப்பட்டு சென்றார். லண்டனில் மு.க.ஸ்டாலின் சுமார் ஒருவார காலம் தங்கியிருந்து அதன்பின்னர் சென்னை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது.இதன்படி ஸ்டாலின் இன்று(17.7.18) சென்னை திரும்புகிறார்.

இந்நிலையில் ட்விட்டரில் இன்று காலை முதல் GoBackStalin என்ற ஹாஸ்டேக் ட்ரெண்ட் ஆகியுள்ளது.அதற்கு காரணமாக பலரும் பல்வேறு காரணங்களை முன் வைத்துள்ளனர். அதாவது, எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் அதிமுகவிற்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை என்றும், ஸ்டாலின் தமிழகத்தில் இல்லாத நேரத்தில்தான் கர்நாடகாவில் மழை பெய்து, காவிரியில் தண்ணீர் வருகிறது என செண்டிமெண்டாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே போல் தமிழகமே அமைதியாக இருக்கிறது என்றும் கடந்த 1 வாரமாக கருப்புக் கொடி, பந்த் போன்ற போராட்டங்கள் எதுவும் நடக்காமல் அமைதி பூங்காவாக விலைவதாகவும், ஸ்டாலின் தமிழகத்தில் இல்லாத நேரத்தில் மேட்டூர் அணையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது என்று பலரும் கடுமையான விமர்சங்களை முன்வைத்துள்ளனர்.

பிரதமர் மோடி சென்னை வந்த போது GoBackModi என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங்கில் இருந்தது. குறிப்பாக திமுக அந்த போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்தது.இந்நிலையில், தற்போது GoBackStalin என்கிற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருக்கும் விவகாரம் திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஸ்டாலின் லண்டனில் இருந்த போது விம்பிள்டன் டென்னிஷ் போட்டிகளை தனது மனைவியுடன் நேரில் சென்று ரசித்தார்.டென்னிஸ் மைதானத்தை சுற்றிப் பார்த்த ஸ்டாலின் மற்றும் துர்க்கா ஸ்டாலின் அங்கிருந்த சாம்பியன் டென்னிஸ் வீரரான எப்.ஜே.பெர்ரி சிலையின் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

publive-image

இதுக் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் மீம்ஸ்கள் வெளியாகி இருந்தன.

Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment