Advertisment

இந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. தங்கம் விலை நிலவரம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் தெற்கு கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
இந்த மாவட்டங்களில் இன்று  கனமழைக்கு வாய்ப்பு.. தங்கம் விலை நிலவரம்

பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்

Advertisment

வரலாறு காணாத உச்சம் தொட்டுள்ள பெட்ரோல்-டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சென்னையில் லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110.85 க்கும் லிட்டர் டீசல் 100.94க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் தெற்கு கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் தெற்கு கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும் அமித்ஷாவுக்கு போதுமா? மறைமலை நகரில் ஸ்டாலின் பேச்சு

ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய கடலோர மாவட்டங்களிலும், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

நாகை மாவட்டத்தில் மழை காரணமாக, 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தங்கம் விலை நிலவரம்

இன்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.4,919 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று விலை எதுவும் மாற்றப்படவில்லை. நேற்றைய விலையே இன்றும் நீடிக்கிறது. ஒரு சவரன் ரூ.39,352 ஆக நீடிக்கிறது. 24 கேரட் தங்கத்தின் விலையிலும் எந்தவொரு மாற்றமும் இல்லை.

24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5,366 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றும் இதே விலை தான் இருந்தது. சவரன் விலை ரூ.42,928ஆக உள்ளது.

பவானிசாகர் அணை நிலவரம்

பவானி சாகர் அணையில் முழு கொள்ளளவு 105 அடியாக உள்ளது. அதன் நீர்மட்டம் 83.28 அடியாக உள்ளது.

நீர்வரத்து 106 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 705 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 17.48 டிஎம்சி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment