பா.ஜ.க. ஆதரவுக் கட்சிகளிடமும் வாக்கு கேட்கும் கோபாலகிருஷ்ண காந்தி : எடப்பாடி, ஓ.பி.எஸ்.ஸுக்கு கடிதம்

துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் வேட்பாளரான கோபாலகிருஷ்ண காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ். உள்ளிட்ட பா.ஜ.க. ஆதரவாளர்களிடமும் ஆதரவு கேட்டு கடிதம்...

துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் வேட்பாளரான கோபாலகிருஷ்ண காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ். உள்ளிட்ட பா.ஜ.க. ஆதரவாளர்களிடமும் ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பியிருக்கிறார்.

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், தி.மு.க. உள்ளிட்ட 18 கட்சிகளின் ஆதரவுடன் துணை ஜனாதிபதி தேர்தலில் கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார். நாடு முழுவதும் பா.ஜ.க. ஆதரவுக் கட்சிகள் உள்ளிட்டோரின் ஆதரவையும் கேட்டு கோபாலகிருஷ்ண காந்தி கடிதம் எழுதியிருக்கிறார்.
அவரது கடிதத்தில் கூறியிருப்பதாவது: காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா உள்ளிட்ட தேசத் தலைவர்களின் கனவை நனவாக்க வேண்டும் என்று நம்பிக்கை கொண்டவர்கள் அரசியல் கட்சிகளையும் தாண்டி தன்னை ஆதரிக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருக்கிறார் அவர்.
தமிழகத்தில் தனக்கு ஆதரவு கொடுத்த திமுக தலைவர் கருணாநிதி மற்றும் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். இத
ர்கிடையே பா.ஜ.க. அணியில் எம்.பி. தேர்தலில் ஜெயித்தவரான பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி, துணை ஜனாதிபதி தேர்தலில் கோபாலகிருஷ்ண காந்திக்கு பாமக ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதேபோல ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அளித்துள்ள பேட்டியில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளும் கோபாலகிருஷ்ண காந்தியை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.

×Close
×Close