Advertisment

தி.மு.க அரசுக்கும்- ஆளுநருக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் - சி.வி சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு

ஆன்லைன் ரம்மி தடை மசோதா திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், இதில் ஆளுநரும் முதல்வர் ஸ்டாலினும் ரகசிய ஒப்பந்தம் போட்டிருப்பார்களோ என சந்தேகம் இருப்பதாக சி.வி சண்முகம் எம்.பி பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Minister CV Shanmugam said that there has been a massacre of democracy in the Erode East by-elections

சி.வி சண்முகம் பேட்டி

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக இயற்றப்பட்டு கடந்தாண்டு இறுதியில் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பபட்டது. இந்தநிலையில் கிட்டதிட்ட 4 மாதங்களுக்கு பிறகு ஆளுநர் மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பினார். ஏற்கனவே மசோதா திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் தற்போது இந்த சட்டம் இயற்ற பேரவைக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி மீண்டும் அனுப்பினார். இதற்கு ஆளும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகம் போதை களமாக மாறி இருக்கிறது. எங்கே பார்த்தாலும் போதை. டாஸ்மார்க் 24 மணி நேரமும் செயல்படுகிறது. கஞ்சா அனைத்து பகுதிகளிலும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம், விலை மதிப்பில்லாத இளைஞர்களின் உயிரைப் பறித்துக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளும், அனைத்து பொதுமக்களும் கோரிக்கை வைத்தார்கள்.

ஆளுநருடன் தேநீர்

விழுப்புரம், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அறக்கட்டளை ஒன்றின் துவக்க விழாவில் நேற்றைய தினம் கலந்து கொண்டார் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம். அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களிடையே பேசிய அவர், "ஸ்டாலின் தலைமையிலான இந்த தி.மு,க அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகம் போதை களமாக மாறி இருக்கிறது. எங்கே பார்த்தாலும் போதை. டாஸ்மார்க் 24 மணி நேரமும் செயல்படுகிறது. கஞ்சா அனைத்து பகுதிகளிலும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம், விலை மதிப்பில்லாத இளைஞர்களின் உயிரைப் பறித்துக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளும், அனைத்து பொதுமக்களும் கோரிக்கை வைத்தார்கள்.

அதனை காதில் வாங்காமல், காலதாமதம் செய்து கொண்டு, வேறு வழியில்லாமல் அரைவேக்காடு தனமாக ஒரு சட்டத்தை இயற்றி, எதிர்க்கட்சியினரின் ஆலோசனைகளை முழுமையாக கேட்காமல். இந்த சட்டத்தை இயற்றக் கூடாது என்று திட்டமிட்டே இந்த அரசு செயல்பட்டது என இப்போது தெரிகிறது.

ஏதே இந்த அரசும் ஆளுநரும் மறைமுகமாக தங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு இருப்பது போல் தெரிகிறது. நீ அனுப்புவது போல் அனுப்பு.. நான் காலதாமதம் செய்வது போல் செய்கிறேன் என்று நாடகம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

தி.மு.க அரசு ஒரு பக்கம் ஆளுநரை எதிர்பதாக காட்டிக் கொண்டு மறுபக்கம் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி இருவரும் ஆளுநருடன் தேநீர் அருந்துகின்றனர். ஒரு சட்டத்தை ஆளுநரிடம் ஒப்புதல் பெற முடியாத முதலமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்" என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Aiadmk Dmk Stalin Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment