Advertisment

சென்னை கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை மேம்பாலம்: திட்டப் பணிகள் தொடக்கம்

Chennai Tamil News: சென்னை கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை மேம்பாலம் அமைப்பதற்காக திட்டத்தை தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

author-image
WebDesk
New Update
சென்னை கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை மேம்பாலம்: திட்டப் பணிகள் தொடக்கம்

சென்னை கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை மேம்பாலம் (Express Photo)

Chennai Tamil News: சென்னை கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை சுமார் 11 கிலோ மீட்டருக்கு உயரமான மேம்பாலம் அமைப்பதற்காக திட்டத்தை தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இந்த திட்டத்திற்கான பணிகளை துவங்குவதற்கு தற்போது டெண்டர் எடுத்துள்ளன. 

Advertisment

இந்த திட்டம் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் அளித்த வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றாகும்.

publive-image

இந்த திட்டத்திற்கான அறிக்கையை தயாரிப்பதற்கு ஆலோசகர்களுக்கு மாநில நெடுஞ்சாலைத் துறை 45 லட்சம் ரூபாய் நிதியாக செலுத்தப்பட்டிருக்கிறது. 

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட போக்குவரத்து ஆய்வுகளின்படி, இரண்டு முக்கிய இடங்களையும் இணைக்கும் சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் தென்படுகிறது.

இந்த திட்ட பணிகளை முடிக்க ஆறு மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இத்திட்டத்தை துவங்குவதற்கு முன் நிலப்பரப்பு ஆய்வு, புவி-தொழில்நுட்ப ஆய்வுகள் முதல் சீரமைப்பு ஆய்வு வரை நடத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் பிற போக்குவரத்து மேலாண்மை நடவடிக்கைகள் உதவுகின்றன.

தற்போது மேம்பாலம் கட்டவிருக்கும் சாலைகளில் பெரும்பாலானவை கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், மதக் கட்டிடங்கள், குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளதால், இந்த சாலைகளை விரிவுபடுத்துவது  கடினமான ஒன்றாக இருந்தது.

சென்னையில் மேம்பாலத்தை அமைக்க திட்டமிட்ட நெடுஞ்சாலைத் துறை, மூன்று சீரமைக்கும் பணியை ஜூன் மாதத்தில் தேர்ந்தெடுத்தது.

இதைத்தொடர்ந்து நடந்த விவாதங்களில், கடலோர ஒழுங்குமுறை மண்டலங்கள் சீரமைப்புகளைத் தவிர்க்க முடிவு செய்து, கிரீன்வேஸ் சாலை சந்திப்பு, மத்திய கைலாஷ் மற்றும் செல்லம்மாள் கல்லூரி சந்திப்பு உள்ளிட்ட 13 முக்கிய சந்திப்புகளை உள்ளடக்கிய வடிவமைப்பை இறுதி செய்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், இந்த திட்டம் குடியிருப்பாளர்களிடமிருந்து கலவையான பதில்களை கொடுத்துள்ளது. அவர்களில் ஒரு பிரிவினர் நெரிசலைக் குறைக்கும் முயற்சியை வரவேற்றாலும், பலர் பயப்படுகிறார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Nhai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment