அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மறு பணி நியமனம் கோர உரிமை இல்லை: நீதிமன்றம் உத்தரவு!

கல்வியாண்டின் நடுப்பகுதியில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், உபரி ஆசிரியர்கள் இருக்கும்போது மறுவேலைக்கு தகுதியற்றவர்கள் என்று நீதிமன்றத்தின் ஒருங்கிணைந்த அமர்வு கூறியது.

madras-high-court-
Government school teachers have no right to seek re-employment again; madras highcourt

ஒரு கல்வியாண்டின் நடுப்பகுதியில் ஓய்வு பெறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மீண்டும் பணியில் அமர்த்தப்படுவதற்கு எந்த உரிமையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மறுவேலைவாய்ப்பு என்பது சரியான விஷயம் அல்ல. ஆசிரியர் பணி ஓய்வு பெறும் வயதை அடைந்தவுடன், ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையிலான உறவு நின்றுவிடும் என்று நீதிபதி எஸ் வைத்தியநாதன் மற்றும் நீதிபதி ஆர் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது.

மார்ச் 16, டிசம்பர் 20, 2018 தேதியிட்ட மற்றொரு அரசாணையை (GO) ஐ அரசு நிறைவேற்றியுள்ளது. அதன்படி, கல்வியாண்டின் நடுப்பகுதியில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், உபரி ஆசிரியர்கள் இருக்கும்போது மறுவேலைக்கு தகுதியற்றவர்கள் என்று நீதிமன்றத்தின் ஒருங்கிணைந்த அமர்வு கூறியது.

முன்னதாக இரண்டு ஆசிரியர்களுக்கு ஆதரவான ஒற்றை நீதிபதி உத்தரவை எதிர்த்து, மாநில அரசு மேல்முறையீடு செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

2019-20ஆம் கல்வியாண்டின் நடுப்பகுதியில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றனர். அக்டோபர் 27, 1988 தேதியிட்ட ஒரு அரசாணையை மேற்கோள் காட்டி, கல்வியாண்டின் எஞ்சிய காலத்திற்கு, மறுவேலைக்கு அவர்கள் கோரினர். கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுவை எதிர்த்த அரசு, தற்போது அதே பாடத்தில் உபரி ஆசிரியர்கள் இருப்பதாக வாதிட்டது.

இதை ஏற்க மறுத்த தனி நீதிபதி, 1988ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மேற்கோள் காட்டி, மாணவர்களின் நலனுக்காக ஆசிரியர்களை மீண்டும் அதே பள்ளியில் மீண்டும் பணியமர்த்தலாம் என்று தீர்ப்பளித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Government school teachers have no right to seek re employment again madras highcourt

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express