Advertisment

வனத்தில் இருந்து வெளியேறிய காட்டெருமைகள் - கொடைக்கானலில் மக்கள் தெறித்து ஓட்டம்

மக்கள் வனத்துறையினருக்கு புகார் செய்ய, வனத்துறையினர் 5 கி.மீ வரை அந்த காட்டெருமை கூட்டத்தை விரட்டி வனத்திற்குள் அனுப்பி வைத்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Group of bisons entered in Kodaikanal main city areas

Group of bisons entered in Kodaikanal main city areas

Group of bisons entered in Kodaikanal main city areas : கொரோனா ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டதால் சுற்றுலாத்தளங்கள் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் யானைகளை கொடைக்கானல் மலைகளுக்கு மேலே இருக்கும் வனப்பகுதிகளில் மட்டும் தான் காணமுடியும். ஆனால் யானைகள் தற்போது சர்வசாதரணமாக கொடைக்கானல் சுற்றுவட்டாரத்தில் திரிந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் வனத்தில் சுற்றித் திரியும் காட்டெருமைகள் தற்போது கொடைக்கானல் மெய்ன் ஏரியாவில் சுற்றித் திரிய ஆரம்பித்துவிட்டன.

Advertisment

கொடைக்கானலுக்கு யாரும் சுற்றுலாவுக்கு வராத நிலையில் வெறிச்சோடிக் கிடக்கும் தெருக்களில் காட்டெருமைகள் கூட்டமாக படையெடுத்து வந்ததது பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. குட்டிகளுடன் வந்த அந்த காட்டெருமைகள் செய்வதறியாமல் திகைத்து நின்றன.

மேலும் படிக்க : உலகை நோக்கி வரும் 3 பெரிய விண்கற்கள்; 2020 இன்னும் எத்தனை சோதனைகளை தரப் போகிறதோ?

அதே போன்று மக்களும் இந்த எருமைகளை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளனர். சாலைகளில் யாரையும் உள்ளே நுழைய விடாமல், இருசக்கர வாகன ஓட்டிகளும் வேறு மாற்று வழியில் தங்களின் வாகனங்களை திருப்பி சென்றார்கள். மக்கள் வனத்துறையினருக்கு புகார் செய்ய, வனத்துறையினர் 5 கி.மீ வரை அந்த காட்டெருமை கூட்டத்தை விரட்டி வனத்திற்குள் அனுப்பி வைத்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Wildlife Kodaikanal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment