குட்கா வழக்கு : 6 பேரின் நீதிமன்ற காவலை அதிகரித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவு!

செல்போனை பிடிங்கி அவரை தரகுறைவாக பேசி கையை முறிக்கி தாக்கியுள்ளனர்.

குட்கா வழக்கில் கைது செய்யபட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு.

நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தியவர்களை வீடியோ எடுக்க கூடாது என கூறி செய்தியாளர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். தமிழக அரசியலில் பரபரப்பாக பேசபடும் குட்கா வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ போலீஸார் கடந்த மாதம் சோதனை நடத்தினர்.

பின்னர் இந்த வழக்கில் குட்கா குடோன் உறிமையாளர்கள் மாதவராவ் ,சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் வரித்துறை அதிகாரி நவனீதகிருஷ்ண பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சிவக்குமார் ஆகியோரை சிபிஐ கடந்த மாதம் கைது செய்தனர். இவர்கள் 6 பேரும் தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கபட்டுள்ளர்.

இவர்களுக்கான நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைவதால் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி திருநீல பிரசாத் முன் ஆஜார் படுத்தபட்டனர். பின்னர் இவர்கள் 6 பேரின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜார் படுத்த புழல் சிறை காவல்துறை உதவி ஆனையர் ஶ்ரீதர் பாதுகாப்பில் அழைத்து வந்தனர். தமிழகத்தையே உலுக்கும் தடைசெய்ய்பட்ட குட்கா வழக்கு என்பதால் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க நீதிமன்றத்திற்கு நின்றுகொண்டிருந்த போது கைது செய்யபடவர்களை வீடியோ எடுத்தனர் அப்போது ஸ்ரீதர் உத்தரவின் பேரின் காவலர்கள் சிலர் செய்தியாளரின் செல்போனை பிடிங்கி அவரை தரகுறைவாக பேசி கையை முறிக்கி தாக்கியுள்ளனர்.

செய்தியாளர் என புகைப்பட அடையள அட்டையை காண்பித்த பிறகு கூட செய்துள்ளனர் இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்ப்பட்டது நீதிமன்றத்திற்கு சிறையிலிருந்து அழைத்து வருபவர்களை அழைத்து வரும்போது குற்றம்சாட்டபட்டவர்கள் உறவினர்கள் யாரிடமும் பேசாமல் பார்த்து கொள்ள வேண்டும் ஆனால் அதை செய்யாமல் ஐந்து பேரின் உறவினர்கள் படிக்கட்டிலிருந்து இறங்கி வாகனத்தில் ஏறும் வரை உறவனர்களிடம் பேச அனுமதிக்கின்றனர்

இவையை செய்தியாக்க கூடாது யென்பதற்காக செய்தியாளர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இந்த வழக்குகளில் செய்தியாளர் எதிராக செயல்படுவதையும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.காவல்துறையினரின் இந்த நடவடிக்கையால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close