குட்கா வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதே நியாயமாக இருக்கும் : நீதிபதிகள் கருத்து

சென்னை போலீஸ் கமிஷனர், உயர் போலீஸ் அதிகாரிகள், சுகாதார துறை செயலாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் லஞ்சம் பெற்றுள்ளனர். இதனை வருமான வரித்துறை உறுதி செய்துள்ளது.

தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனைக்கு சுகாதார துறை அமைச்சர், டி.ஜி.பி சென்னை போலீஸ் கமிஷனர் உதவியதாகவும், எனவே வழக்கை சிறப்பு விசாரணை குழு விசாரிக்க உத்தரவிட கோரி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் தொடங்கி நடந்து வருகிறது.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு விசாரித்து வருகிறது. இதன் LIVE UPDATE:

மாலை 3.50 :

திமுக தரப்பில் வாதம் மூத்த வக்கீல் வில்சன் : தடை செய்யப்பட்ட பொருளான குட்காவை தமிழகம் முழுவதுமாக விற்பனை செய்ய உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்றனர். 2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை டி.ஜி.பி, சென்னை போலீஸ் கமிஷனர், உயர் போலீஸ் அதிகாரிகள், மற்றும் சுகாதார துறை செயலாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் லஞ்சம் பெற்றுள்ளனர். இதனை உறுதிபடுத்தும் வைகையில் வருமான வரித்துறை தன்னுடைய பதில் மனுவில் குற்றம் நடைபெற்றுள்ளது என தெரிவித்துள்ளது. எனவே தற்போதைய விசாரணை சரியாக இருக்காது விசாரணை சிறப்பு குழுவிற்கு மாற்ற வேண்டும். இந்த குற்றம் தமிழகத்தில் மட்டும் நடைபெறவில்லை ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தில் லஞ்பணம் கைமாறியுள்ளது. மத்திய அரசின் பதில் மனு மற்றும் கலால் துறை பதில் மனுவில் தமிழகத்திற்கு வெளியே குட்கா தொடர்பான முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என தெரிவித்துள்ளது. எனவே தன்னிச்சையான விசாரணை அமைப்பு தேவை.

மாலை 4.10 மணி :
மத்திய அரசு வழக்கறிஞர் ராஜகோபால்:

56 கோடி ரூபாய் அளவிற்கு லஞ்சபணம் கைமாறியது தொடர்பான ஆதாரங்கள் வருமானத்தை ஆய்வில் கிடைத்தது. மாநில போலீசார் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டால், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றலாம்.

ஏற்கனவே வருமானவரித் துறை தாக்கல் செய்த பதில் மனுவை படித்து இது தங்களின் தரப்பு வாதம் என்றார்.

மாலை 4.15 மணி :
திமுக வக்கில் வில்சன் :

கடந்த 4 ஆண்டுகளில் குட்கா விற்பனை தொடர்பாக ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யபட்டுள்ளது. தமிழகத்தை தாண்டி ஆந்திரா, கர்நாடக, டெல்லி உள்ளிட்ட இடங்களில் குட்கா முறைகேடுகள் மற்றும் லஞ்சபணம் கைமாறியுள்ளது. எனவே அதனை லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரிக்க முடியாது எனவே வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் அதனை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற கண்காணிக்க வேண்டும். மத்திய அரசு அதிகாரிகளுக்கும் குட்கா முறைகேட்டில் தொடர்பு உள்ளது. ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலருக்கு இதில் தொடர்பு உள்ளது. எனவே அவர்கள் மீது கீழ் நிலையில் உள்ள விசாரணை அதிகாரிகள் விசாரிக்க முடியாது.

மாலை 4.20 மணி :

குட்கா முறைகேடு ஒரு மாநிலம் தொடர்பானது மட்டுமல்ல; 3 மாநிலங்கள் தொடர்புடையது

மாலை 4.25 மணி :

அரசு தலைமை வழக்கறிஞர், தற்போதய விசாரணை அமைப்பின் விசாரணை தொடர்பான விபரங்களை சீல் இட்ட கவரில் தாக்கல் செய்தார்.

தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் :

விசாரணை வேறு அமைப்பிற்கு மாற்ற கூடாது. குற்றச்சாட்டுக்காக மட்டுமே விசாரணை வேறு அமைப்பிற்கு மாற்ற கூடாது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறையிடம் கோரியுள்ளேம்.விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.

மாலை 4.30 மணி :

நீதிபதிகள் : எத்தனை பேர் இதுவரை கைது செய்யபட்டுள்ளனர்.

அரசு தலைமை வழக்கறிஞர் : 4800 மேற்பட்ட வழக்குகள் காவல்துறை பதிவு செய்துள்ளது.உணவுப் பாதுகாப்பு துறை மட்டுமே 1 வழக்கை பதிவு செய்துள்ளது. வருமான வரித்துறை வசம் உள்ள டிஸ்க்கில் மத்திய அரசு அதிகாரிகள் பெயர் நீக்கப்படலாம் என்பதால் அந்த டிஸ்க்க்கை கேட்டுள்ளோம்.

மாலை 4.35 மணி:

நீதிபதிகள் : அப்படி மற்றி விடுவர் என்றால் வழக்கை சி பி ஐ க்கு மாற்றுவதே சரியாக இருக்கும்.

அரசு தலைமை வழக்கறிஞர் : உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளது என்ற மனுதாரர்ப்குற்றச்சாட்டுக்கும் அரசு பதில் தர தயாராக இருக்கிறோம். மெல்லும் புகையிலைக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. அது தொடர்பான அறிவிப்பாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

மாலை 5 மணி :

வழக்கை நாளைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

×Close
×Close