Advertisment

குட்கா ஊழல் வழக்கு : அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தீவிர விசாரணை

சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்று மாலைக்குள் ஆஜராக உத்தரவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
குட்கா ஊழல் வழக்கு சிபிஐ விசாரணை

குட்கா ஊழல் வழக்கு சிபிஐ விசாரணை

குட்கா ஊழல் வழக்கு சிபிஐ விசாரணை :  2013ம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் குட்கா பொருட்களின் விற்பனைக்கு தடை நிலவி வருகிறது. ஆனால் சட்டத்திற்கு புறம்பாக குட்கா உற்பத்தி மற்றும் விற்பனை தமிழகத்தில் நடைபெற்று வந்தது. இதனை விற்பனை செய்வதற்கு மாநில அமைச்சர்கள், காவல் துறை ஆய்வாளர்கள், மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின.

Advertisment

2016ம் ஆண்டு குட்கா தயாரிப்பாளரான மாதவராவ் அவரின் வீடு மற்றும் குடோன் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி முக்கிய டைரி ஒன்றினை கைப்பற்றினர். அதில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

குட்கா ஊழல் வழக்கு சிபிஐ விசாரணை

இவ்வழக்கினை மத்திய புலனாய்வுத் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ததாக ஆலை உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, இவர்களுடன் மத்திய கலால்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் மற்றும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், சிவக்குமார் ஆகியோரை மத்தியப் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்

மேலும் குட்கா ஊழல் வழக்கில் நேரில் ஆஜராகச் சொல்லி விஜயபாஸ்கர் மற்றும் அவரின் உதவியாளர் சரவணன் இருவருக்கும் சிபிஐ அழைப்பாணை விடுவித்திருந்தது. விஜயபாஸ்கரின் உதவியாளர் கடந்த 7ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் மத்திய புலனாய்வுத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். 10 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது.

மாதவராவ், அதிமுக ஆட்சியின் போது வணிகவரித்துறை அமைச்சராக பணியாற்றி வந்த ரமணாவுக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் ரமணா இருவரும் சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவினை புலனாய்வுத் துறை பிறப்பித்தது.

இந்த நிலையில், குட்கா முறைகேடு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ அதிகாரிகள் 8 மணிநேரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ரகசியமாக ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் முன்னாள் அமைச்சர் ரமணாவிடம் 6 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க : நேரில் ஆஜரானார் விஜயபாஸ்கர் உதவியாளர் சரவணன்

Minister C Vijayabaskar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment