எந்த பக்கம் திரும்பினாலும் பிரச்சனை, நெருக்கடி.. என்ன செய்ய போகிறார் எச் ராஜா?

எச் ராஜாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

நீதிமன்றத்தை அவமதிக்கு விதமாக பேசி சிக்கலில் மாட்டிக் கொண்ட எச் ராஜாவிற்கு அனைத்து தரப்பில் இருந்தும் நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.

எச். ராஜாவும் சர்ச்சை பேச்சுகளும்:

நல்லது செய்து பெயர் வாங்கினவர்கள் சிலர் என்றால்,  வீணாக பேசியே தனது பெயரை ஊர் அறிய செய்பவர்கள் பலர்.  இந்த பலரில் முதலிடத்தில் இருப்பவர் எச். ராஜா.  பாஜகவின் தேசிய செயலாளரான இவர், இன்று வரை அரசியல்  குறித்து ஆரோக்கியமான கருத்து கூறியோ அல்லது விமர்சனம் செய்தோ   பிரபலமாகவில்லை.

பாதி நேரம்  தேவையற்ற , பொதுமக்கள் விரும்பாத கருத்துக்களை கூறி  சர்ச்சை மன்னனாக வல வந்துக் கொண்டிருக்கிறார். இதுவரை இவர் மீது  தொடரப்பட்ட  அவமதிப்பு  வழக்குகள் ஏராளம்.  ஆனால் இம்முறை  எச் ராஜா  நீதிமன்றத்தை அவமதித்து பேசியிருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது தேவாலயம் அருகே மேடை அமைக்க போலீஸார் அனுமதி வழங்காததால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட எச் ராஜா , காவல்ர்களை கேவலமான வார்த்தைகளால் திட்டினார்.அதோடு மட்டுமில்லாமல், நீதிமன்றத்தையே அவமதித்து கீழ்தரமான வார்த்தைகளால் விமர்சித்தார்.

இந்நிலையில் நீதிமன்றத்துக்கு எதிரான தவறான கருத்துகளை தெரிவித்த எச் ராஜா மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர பரிந்துரை செய்ய வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த கண்ணதாசன் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் மனு அளித்துள்ளார்.

அதனை விசாரித்த தலைமை வழக்கறிஞர், கிரிமினல் அவதூறு வழக்கு தொடர ஏன் அனுமதி அளிக்க கூடாது என்று கேட்டு எச் ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அக்டேபார் 3 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க எச் ராஜாவுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

இதன்படி வரும் அக்டோபர் 3 ஆம் தேதி எச் ராஜா நேரில் ஆஜாராக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒருபக்கம் என்றால் மறு பக்கம், எச்.ராஜா மீது சென்னை காவல் ஆணையரிடம் இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர். இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் பற்றி எச்.ராஜா அவதூறாக பேசியதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் எச்.ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், எச்.ராஜா மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுவதாகவும், அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக எம்.பி அருண்மொழிதேவன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.

இந்நிலையில் எச் ராஜா கருத்தை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடிக்கதொடங்கியுள்ளன. இவை எல்லாவற்றையும் கடந்து எச் ராஜாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close