Hai guys : அந்திமழை சாரல் மழை, தூறல் மழை, அடைமழையும் பாத்துருப்பீங்க, பூமழைய பாத்துருக்கீங்களா? இனி பாப்பீங்க…

Hai guys : தர்பார் படம், வர்ற 9ம் தேதி ரிலீஸ் ஆகுது. இந்த நாளை, சேலம் ரஜினி ரசிகர்கள் வித்தியாசமாக கொண்டாட முடிவு பண்ணியிருக்காங்க.

By: Updated: January 7, 2020, 11:06:51 AM

வணக்கம், வந்தனம், சுஸ்வாகதம், நமஸ்கார்….

என்ன நண்பர்களே! நல்லா இருக்கீங்களா.., புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடர்ந்து பொங்கல் கொண்டாட்டங்களுக்கு ரெடி ஆயிட்டு இருப்பீங்க… என்சாய் பண்ணுங்க..

வாங்க, இன்னைக்கு நிகழ்ச்சிக்கு போகலாம்

தர்பாருக்கு இசை அமைத்த அனிருத் மீது இப்படி ஒரு நடவடிக்கையா?

நடந்து முடிஞ்ச உள்ளாட்சி தேர்தல்ல, பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட நிலையில, தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேத்ததுல 50 சததவீத பெண்கள் இருந்துருக்காங்க…

வாழ்த்துக்கள் சகோதரிகளே…. வரும் காலம் வசந்தகாலம் ஆகட்டும்.

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி அளித்த வழக்கை, சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு, ஜனவரி13ம் தேதி விசாரணை நடத்த போவதா அறிவிச்சிருக்கு

(இன்னும் என்னென்ன ரணகளம் நடக்கப்போகுதோ…)

Hai guys : தலைவர் படத்த தல பாக்கபோறாராம் ; எல்லாம் இதுக்காகத்தான்….

Hai guys : ரயில், கேஸ் சிலிண்டர் விலையுயர்வு என கோலாகலமாத்தான் ஆரம்பிச்சிருக்கு புத்தாண்டு

சென்னை பெசன்ட் நகர் அசுத்தமாவதை தடுக்க புது திட்டம் துவங்கப்பட்டுருக்கு. மெரினாவுக்கு அடுத்தபடியாக, அதிக மக்கள் கூடும் கடற்கரையாக உள்ளது. இங்கு, தின்பண்ட கடைகள் அதிகம் உள்ளதால், குப்பை சேர்ந்து, கடற்கரை பொலிவிழந்தது.காலையில், மணல் பரப்பில் குப்பை அள்ள, 15 ஊழியர்கள் மற்றும் குப்பை சேகரிக்கும் இயந்திரம் உள்ளது. இருந்தாலும், மாலையில் பொதுமக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு, ஆங்காங்கே குப்பை குவியலாக இருக்கும். இதை தடுக்க, உடனுக்குடன் குப்பை அள்ளும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

நல்ல முயற்சி..

 

தர்பார் படம், வர்ற 9ம் தேதி ரிலீஸ் ஆகுது. இந்த நாளை, சேலம் ரஜினி ரசிகர்கள் வித்தியாசமாக கொண்டாட முடிவு பண்ணியிருக்காங்க. சேலம் ஏஆர்ஆர்எஸ் தியேட்டர் பகுதியில், 9ம் தேதி ஹெலிகாப்டர் மூலம் பூ தூவ ரசிகர்கள் திட்டமிட்டு, அதற்காக, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு கோரிக்கையும் வச்சிருக்காங்க…அனுமதி கிடைச்சிரும்னும்னு நம்புறாங்க…

எப்படித்தான் யோசிக்கிறாங்களோ!!!

வடகிழக்கு பருவமழை நிறைவடைய உள்ள நேரத்துல, மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்கள்ல நேத்து மழை பெஞ்சிருக்கு. அடுத்த 2 நாள்ல, இன்னும் சில இடங்கள்ல மழை பெய்ய வாய்ப்பிருக்காம். வளிமண்டலத்துல காற்றின் மாறுபாடு காரணமாக இந்த மழை பெய்யுதுன்னு வானிலை மையம் சொல்லியிருக்கு..

மாதம் மும்மாரி பொழியுதானு பாடப்புத்தகத்துல மட்டுந்தான் இனி பாக்க முடியும்போல..

ஓகே நண்பர்களே, மீண்டும் அடுத்த நிகழ்ச்சியும் சந்திப்போம். Bye…

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Hai guys north east monsoon darbar rajinikanth sabarimala case local body election

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X