Advertisment

Hai guys - நடிகர்களின் சம்பளம் இதைப்போலயாம்.... கமல் புது விளக்கம் குடுக்குறாருப்பு...

Hai guys : என்ன நண்பர்களே, பொங்கல் கொண்டாட ரெடி ஆயிட்டீங்களா, தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாடுங்க, அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

author-image
kumaranbabu tk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hai guys, pongal, pongal festival, bhogi, anna university, engineering colleges, music, expressions, research, kamalhaasan, actors, salary, idli, pongal, karnataka, makara sankaranthi, coconut,

Hai guys, pongal, pongal festival, bhogi, anna university, engineering colleges, music, expressions, research, kamalhaasan, actors, salary, idli, pongal, karnataka, makara sankaranthi, coconut, பொங்கல், பொங்கல் திருநாள், தமிழர் திருநாள், போகி, அண்ணா பல்கலைக்கழகம்ல இஞ்ஜினியரிங் கல்லூரிகள், இசை, உணர்வுகள், ஆய்வு, கமல்ஹாசன், நடிகர்கள், சம்பளம், கர்நாடகா, பொங்கல், மகர சங்கராந்தி

வணக்கம் வந்தனம் சுஸ்வாகதம் நமஸ்கார்

Advertisment

என்ன நண்பர்களே, பொங்கல் கொண்டாட ரெடி ஆயிட்டீங்களா, தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாடுங்க, அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

வாங்க, இன்னைக்கு நிகழ்ச்சிக்கு போகலாம்...

நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..

கோயம்பேடு திணறுகிறது: பொங்கல் பண்டிகையின் போது நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்..

உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத, 100 இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான இணைப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அவற்றை மூட பரிந்துரை செய்யும் நடவடிக்கைகளை, அண்ணா பல்கலைக் கழகம் துவங்கியிருக்காம்...

நல்ல முயற்சி, இப்பவாவது எடுத்தீங்களே!!!

Hai guys : அந்திமழை சாரல் மழை, தூறல் மழை, அடைமழையும் பாத்துருப்பீங்க, பூமழைய பாத்துருக்கீங்களா? இனி பாப்பீங்க...

Hai guys : தலைவர் படத்த தல பாக்கபோறாராம் ; எல்லாம் இதுக்காகத்தான்....

உலக மொழியான இசை, கேட்பவர்களிடமிருந்து பொழுதுபோக்கு, மகிழ்ச்சி, பாலுணர்வு, அழகு, ஒய்வு, கவலை, கனவு, வெற்றி, பதட்டம், பயம், எரிச்சல், எதிர்ப்பு மற்றும் உற்சாகம் ஆகிய 13 விதமான உணர்வுகளை வெளிக்கொணர்வதாக, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துருக்காம்....

இசை எங்கே இருந்து வருதுனு மட்டும் கேட்டுறாதீங்கப்பு!!!

நடிகர்களின் சம்பளம் கோடிக்கணக்குல இருக்குதேனு நம்ம பத்திரிகை நண்பர்கள், நடிகர் கம் அரசியல்வாதி கமல்ஹாசன்கிட்ட கேள்விய கேட்டிருக்காங்க...

அதுக்கு அவர் கொடுத்திருக்கிற பதில் தான் நச்.....நீங்களே கேளுங்களேன்..

நடிகர்களின் சம்பளம் என்பது இட்லி விலையை போலத்தான். நேரத்துக்கு, இடத்துக்கு தகுந்தமாதிரி கூடும், குறையும். திறமைதான் நடிகர்களின் சம்பளத்தை உயர்த்துகிறது. அவர்களுக்கு மக்கள் தரும் பாராட்டுகள் தான் சம்பளத்தை தீர்மானிக்கிறது. தான் முதலில் ரூ.250 சம்பளத்தில் தான் நடித்தாக கமல் கூறினார்.

அப்பல்லோ ஹோட்டல்ல இட்லி விலை லட்சக்கணக்காம்ல!!!

பக்கத்து ஊர்ல, பொங்கல இப்படித்தான் கொண்டாடுவாங்களாமே...

கர்நாடக மாநிலத்தில், மகர் சங்கராந்தி என்ற பெயரில் அழைக்கப்படும் பொங்கல், ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், விவசாயிகள், அறுவடை தானியங்களுடன் தங்கள் வேளாண் கருவிகளை வைத்து, பூஜை செய்வாங்க, பூஜையில் வைச்ச இளநீர்களை, அருகில் உள்ள மலைகளில் ஏறி, வேகமாக துாக்கி எறிவாங்க. அது விழும் துாரத்துக்கு, தங்கள் கிராம எல்லைகள் விரிந்து, வளரும் என்பது அவங்க நம்பிக்கையாம்.

ஓகே பிரண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம், வரட்டா...

Kamal Haasan Pongal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment