Advertisment

ஒமிக்ரான் வகை கொரோனா: மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவசர கடிதம்

சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் “தமிழகத்தில் ஒமிக்ரான் கொரோனா இல்லை. கொரோனா இல்லை என்று பொதுமக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது முகக்கவசம் அணிய வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Health Secretary letter to all collectors, dr radhakrishnan alert about omicron variant of covid 19, ஒமிக்ரான் வகை கொரோனா, மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் அவசர கடிதம், covid 19, omicron variant, coronavirus

கொரோனா வைரஸ் தொற்று மாறுபாடு அடைந்து வரும் நிலையில், தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு ஒமிக்ரான் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ண அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

கோவிட்-19 பரிசோதனைகளை முடுக்கிவிடவும், பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தவும் மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்துகிறது. தடுப்பூசி இயக்கங்கள் மற்றும் கள பரிசோதனைகளை முடுக்கிவிடுமாறு சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட நிர்வாகங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு, இதுவரை, கிட்டத்தட்ட 70 மில்லியன் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது மற்றும் ஒவ்வொரு வாரமும் மாநிலம் முழுவதும் இரண்டு சிறப்பு முகாம்களை நடத்துவதன் மூலம் தடுப்பூசிகளை விரைவாகக் கண்டறிந்து வருகிறது. தடுப்பூசி போடப்படாத மக்களுடன் ஒப்பிடும்போது தடுப்பூசி போடப்பட்ட மக்களிடையே இறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக இருப்பதாக அரசு கண்டறிந்துள்ளது.

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: “ஒமிக்ரான் வகை கொரோனாவை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கக்கூடாது. தென் ஆப்ரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோரை 8 நாட்களுக்குப்பின் மீண்டும் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரொனா தடுப்பூசி போடும் பணிகளை தொடர்ந்து துரிதப்படுத்தவும் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படாமல் கொரோனா தடுப்பூசி கட்டுப்படுத்தும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தகுதியுடைவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். ” என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, டாக்டர் ராதாகிருஷ்ணன் ஊடகங்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் ஒமிக்ரான் கொரோனா இல்லை. கொரோனா இல்லை என்று பொதுமக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது முகக்கவசம் அணிய வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.

இதனிடையே, ஒமிக்ரான் கொரோனா பரவல் எதிரொலியாக 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், பிரேசில், வங்கதேசம், மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல், போட்ஸ்வானா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயனிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதம் கட்டாயம் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Coronavirus Dr Radhakrishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment