Advertisment

புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

Heavy Rain in Chennai IMD updates Tamil News நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள், அருகில் இருக்கும் துறைமுகங்களுக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Heavy Rain in Chennai IMD updates Tamil News

Heavy Rain in Chennai IMD updates Tamil News : வட தமிழகக் கடலோரம், தென்மேற்கு வங்கக்கடலில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Advertisment

வடகிழக்கு பருவமழையால், தமிழக முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு கடலோர காவல் படை அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, சென்னை அருகே படகு மூலம் நடுக்கடலுக்குச் சென்ற கடலோர காவல்படையினர், உடனடியாக கரை திரும்புமாறு ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தி, காற்றழுத்த தாழ்வுப் பகுதி குறித்தும் எச்சரித்து வந்தனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள், அருகில் இருக்கும் துறைமுகங்களுக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் கனமழை பெய்ததால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இரவு முழுவதும் பெய்த தொடர் மழையால் நகரின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகள் தண்ணீரில் மூழ்கிய நிலையில், சைதாப்பேட்டை, வேளச்சேரி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், மேற்கு மாம்பலம் ஆகிய பகுதிகளில் சுமார் 2 முதல் 3 அடி வரை வெள்ளம் சூழ்ந்தது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகக் கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பிறகு மிக கனமழை பெய்ததாகக் கூறப்படுகிறது.

தி நகர், வியாசர்பாடி, அடையாறு, வேளச்சேரி, ராயப்பேட்டை மற்றும் மயிலாப்பூர். ஜவஹர்லால் நேரு நகர், மாதவரம், தொண்டியார்பேட்டை ஹைரோடு, வடக்கு டிரங்க் சாலை, ராயபுரம், தேனாம்பேட்டை, காதர் நவாஸ் கான் சாலை, வேளச்சேரியின் உள் பகுதிகள், நகரின் புறநகர்ப் பகுதியான சோழிங்கநல்லூரில் பல பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்யும் என ஐஎம்டி கணித்துள்ளது. சூறாவளி சுழற்சி தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 4.5 கிமீ வரை நீண்டுள்ளது. அதன்படி 2021 நவம்பர் 09-ம் தேதி தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் சுற்றுப்புறங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று IMD தெரிவித்துள்ளது.

மேலும், தெற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் புரவியரசன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவாரூரில் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment