சென்னையில் அக்டோபர் 15-ம் தேதி கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. திங்கட்கிழமை மதியம் முதல் மழை தொடங்கி அதன் பின்னர் தீவிரமடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு மத்திய அரபிக்கடலில் இருந்து வட இலங்கை வரை நிலவுவதால் கடலோர கர்நாடகா மற்றும் தமிழ்நாடு முழுவதும் மழை பெய்ய உள்ளது.
நாளை (அக்.14) திங்கட்கிழமை விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அக்.15 (செவ்வாய்க்கிழமை)
அக்.15-ம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இங்கு அக்டோபர் 16-ம் தேதி வரை மழை நீடிக்கும்.
செவ்வாய்க்கிழமையன்று கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 16-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“