Advertisment

தி.மு.க மகளிர் அணி புதிய செயலாளர் ஹெலன் டேவிட்சன்: கனிமொழி விடுவிப்பு

தி.மு.க மகளிர் அணிக்கு புதிய நிர்வாகிகள் அறிவிப்பு; மகளிர் அணிச் செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமனம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தி.மு.க மகளிர் அணி புதிய செயலாளர் ஹெலன் டேவிட்சன்: கனிமொழி விடுவிப்பு

தி.மு.க மகளிர் அணியின் புதிய செயலாளராக ஹெலன் டேவிட்சனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமித்துள்ளார்.

Advertisment

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பல்வேறு அணிகளில் முக்கியத்துவம் வாய்ந்த அணி மகளிர் அணி. இந்த மகளிர் அணியின் செயலாளராக இதுவரை கனிமொழி இருந்து வந்தார். தற்போது அவர் துணைப் பொதுச்செயலாளராக பதவி உயர்வு பெற்ற நிலையில், மகளிர் அணி பொறுப்பில் இருந்து தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: தி.மு.க இளைஞர் அணிக்கு புதிய நிர்வாகிகள்: செயலாளராக மீண்டும் உதயநிதி நியமனம்

தற்போது புதிய மகளிர் அணிச் செயலாளராக முன்னாள் எம்.பி ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன் நியமிக்கப்பட்டுள்ளார். இணைச் செயலாளராக குமரி விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மகளிர் அணி துணைச் செயலாளர்களாக பவானி ராஜேந்திரன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மகளிர் அணியில் உள்ள தொண்டர் குழு, பிரச்சார குழு, ஆலோசனை குழு, தகவல் தொழில்நுட்ப குழு ஆகியவற்றில் உள்ள பதவிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு புதிய நிர்வாகிகளை நியமித்து தி.மு.க தலைமை கழகம் அறிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment