ஐகோர்ட் சென்ற மிஸ்டர் ஐகோர்ட்.. உண்மையாவே அவர் பெயர் இதுதான்பா!

மிஸ்டர் ஐகோர்ட்டிற்கு எப்படி அந்த பெயர் வந்தது

”சென்னை உயர்நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருகின்றது.புதுமையான பல மனிதர்களை கண்டிருகின்றது.ஆனால் இந்த வழக்கு விசித்திரம் அல்ல.வழக்கு தொடுத்த மனிதரின் பெயர் தான் விசித்திரம்”

ஐகோர்ட் :

என்னடா பராசக்தி வசனம் சற்று வித்யாசமாகவே தெரிகிறதே? என்று யோசிக்கிறீர்களா… ஆம் சென்னை உயர்நீதிமன்றம் இதுவரை பல வழக்குக்களை சந்தித்த்து இருக்கும், அதே போல் வழக்கு தொடுப்பவர்களை பலமுறை குறுக்கு விசாரணையும் செய்திருக்கும். ஆனால் முதன்முறையாக ஒருவரின் பெயரை கேட்டு நீதிபதியே ஷாக் ஆனது இதுவே முதன்முறை.

ஐகோர்டில் வழக்கு தொடுத்தவர் ஐகோர்ட்.. இந்த பெயரைக் கேட்டு தான் நீதிபதி பி.என் பிரகாஷ் திகைத்து மீண்டும் உச்சரியுங்கள் என்றார். படத்தில் வருவது போல் அவரின் பெயர் மிஸ்டர் ஐகோர்ட்.. மிஸ்டர் ஐகோர்ட்.. மிஸ்டர் ஐகோர்ட் என்று 3 முறை அழைக்கப்பட்டது.

72 வயதான மிஸ்டர் ஐகோர்ட் பணியிலிருந்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஆவர். 33 வருடங்கள் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய அவர், கடந்த 2004 ஆம் ஆண்டு ஓய்வு பெற்று தனது சொந்த கிரமமான திருவண்ணாமலையில் விவசாயம் பார்த்து வருகிறார்.

இந்நிலையில், மிஸ்டர் ஐகோர்ட்டை அவரது கிராமத்தை சேர்ந்தவரின் மகன்கள் இருவரு ஜாதி பெயர் கூறி அழைத்துள்ளனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த மிஸ்டர் ஐகோர்ட்டை அவர்கள் ஜாதி பெயர் கூறி அழைத்து தரக்குறைவாக பேசியதால் அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றம்சாட்டப்ப்ட்ட இருவருக்கும் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை வழங்கினார். அத்துடன் , மிஸ்டர் ஐகோர்ட்டிற்கு எப்படி அந்த பெயர் வந்தது என்ற காரணத்தையும் அவரிடம் கேட்டுமாறும் அவரின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close