இந்தி மொழி கட்டாயம்? : கோவை மாநகராட்சி பள்ளி விண்ணப்பத்தால் பரபரப்பு

Hindi imposition : நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக்கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலையில், அதில் இந்தி கட்டாயமல்ல என்றும் ஏதேனும் ஒரு இந்திய மொழியைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

By: Updated: August 19, 2020, 04:19:21 PM

கோவை மாநகராட்சி பள்ளி ஒன்றின் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில், 3வது மொழியாக இந்தி மொழியை ஏற்க விருப்பமா என்ற கேட்கப்பட்டுள்ள நிகழ்வு, அரசு பள்ளிகளில் இந்த மொழி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக என்ற கேள்விக்கு வித்திட்டுள்ளது.

புதியகல்விக்கொள்கையில் மும்மொழிக்கொள்கை வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே அமலில் இருக்கும். மும்மொழிக்கொள்கைக்கு தமிழகத்தில் இடமில்லை என்று முதல்வர் பழனிசாமி, சமீபத்தில் அறிவித்திருந்தார்.

தமிழகம் முழுவதும் அரசு ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் பணியை தொடங்கி உள்ளது. இதன்படி கோவை மாநகராட்சியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது,. 1ஆம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களில் இந்தி மொழி படிக்க விரும்புகிறீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த கேள்வியால் இந்தி மொழி அரசு பள்ளிகளில் கற்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

 

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக்கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலையில், அதில் இந்தி கட்டாயமல்ல என்றும் ஏதேனும் ஒரு இந்திய மொழியைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

கோவை மாநகராட்சி அரசு பள்ளியில் 1ஆம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களில் இந்தி மொழி படிக்க விரும்புகிறீர்களா? என்று கேள்வி உள்ளது. அந்த மாணவர் சேர்க்கை படிவத்தில் “மாணவரின் தாய் மொழி ஒரு கேள்வியாக கேட்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக முதல் மொழியின் கீழ் மாணவர் எடுத்துக் கொள்ள விரும்பும் உத்தேச மொழிகள் என்ற கேள்வி உள்ளது. மூன்றாவது மொழி (இந்தி) எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்களா அல்லது கைதொழில் ஒன்றை அதிகப்படியாக கற்றுக்கொள்ள விரும்புகிறார்களா? என்று உள்ளது.

போலி விண்ணப்பம் : கோவையில் 3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா என மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் கேட்கப்படவில்லை என்றும் அந்த விண்ணப்ப படிவம் நான் பதவியேற்ற பின் வெளியிடப்படவில்லை. என்றும் கோவை மாநகராட்சி ஆணையர் ஷர்வன் குமார் விளக்கம் அளித்துள்ளார். குறிப்பிட்ட ஒரு பள்ளியில் மட்டுமே அப்படி ஒரு விண்ணப்பம் வந்ததாகவும், அந்த பள்ளி தலைமை ஆசிரியர் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் , போலியான விண்ணப்பம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Hindi imposition tamilnadu government schools coimbatore corporation school student admission

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X