நாட்டின் பொருளாதாரம் எப்படி உயரும்: நிர்மலா சீத்தாராமன் கேள்வி

வணிகர்கள் வருமானவரி செலுத்த தயங்கினால் நாட்டின் பொருளாதாரம் எப்படி உயரும் என நிர்மலா சீத்தாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வணிகர்கள் வருமானவரி செலுத்த தயங்கினால் நாட்டின் பொருளாதாரம் எப்படி உயரும் என நிர்மலா சீத்தாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தைக் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்ற மைய வளாகத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி அறிமுக விழாவில், இந்த வரிவிதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி மூலம் அதிகபட்சமாக 28 சதவீதம் வரை வரி வசூலிக்கப்படுகிறது. இதனால், பொருட்களின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. மேலும், ஜிஎஸ்டி வரிவிதிப்பை குறைக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்றன. பட்டாசு உற்பத்தியாளர்கள், தீப்பெட்டி தயாரிப்பாளர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வணிகர்கள் வருமானவரி செலுத்த தயங்கினால் நாட்டின் பொருளாதாரம் எப்படி உயரும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அரசு வருமானத்தை அதிகரிக்க ஜிஎஸ்டி அமல்படுத்தப்படவில்லை எனவும், மாநில அமைச்சர்களிடம் கலந்து ஆலோசனை செய்தபின் தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது எனவும் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

தமிழக தொழில்துறை நலன்களையும் கருத்தில் கொண்டுதான் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது என தெரிவித்த அமைச்சர், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு விற்கப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.

இட்லி மாவு, செங்கல் உற்பத்தி, தீப்பெட்டி தயாரிப்பு உள்ளிட்டவைகளுக்கு வரி விலக்கு, வரி குறைப்பு குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

×Close
×Close