Advertisment

புதிய ரேஷன் கார்டு: வீட்டில் இருந்தபடி நிமிடத்தில் அப்ளை செய்யலாம்!

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது முதல், ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பது நீக்கல் வரை எல்லாவற்றையும் ஆன்லைனில் வீட்டில் இருந்தே செய்யலாம். ரேஷன் கார்டை ஆன்லைன் வழியாக எப்படி விண்ணப்பிப்பது என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
how to apply new ration card, ration card online service,புதிய ரேஷன் கார்டு, வீட்டில் இருந்தபடி நிமிடத்தில் அப்ளை செய்யலாம், ஆன்லைன் வழியாக ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி, தமிழ்நாடு, ரேஷன் கார்டு, குடும்ப அட்டை, ration card, tamil nadu, family card, how to apply new family card, ration card types, tamil nadu govt, food security

ரேஷன் கார்டு, ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல் முகவரி அடையாள ஆவணமாகவும் பயன்படுகிறது. அதனால், தற்போது ரேஷன் கார்டு புதியதாக வாங்குவதற்கு அரசு அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டியதில்லை. புதிய ரேஷன் கார்டு கோரி வீட்டில் இருந்தபடியே நிமிடத்தில் விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது என்று இங்கே தரப்பட்டுள்ளது.

Advertisment

ரேஷன் கார்டு பல்வேறு அரசு திட்டங்களில் பயன்பெறவும் அரசு அலுவலகங்களில் அடையாள ஆவணமாக பயபடுத்தப்படுகிறது. ரேஷன் கார்டில் உள்ள தகவலின்படி, வருமானத்தின் அடிப்படையில் அந்த அட்டைக்கு ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது.

ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் சேர்க்கபட்டிருக்கும். வீட்டில் புதிதாக குழந்தை இருந்தாலும் அல்லது திருமணமாகி ஒருவரின் பெயர் சேர்ப்பதாக இருந்தாலும் அனைவரின் பெயர்களும் ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதே போல,வீட்டில் மகளுக்கு திருமணமாகி விட்டாலோ அல்லது வீட்டில் யாராவது இறந்து விட்டால், அவருடைய பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்குவது முக்கியம்.

அதனால், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது முதல், ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பது நீக்கல் வரை எல்லாவற்றையும் ஆன்லைனில் வீட்டில் இருந்தே செய்யலாம். ரேஷன் கார்டை ஆன்லைன் வழியாக எப்படி விண்ணப்பிப்பது என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.

முதலில் ரேஷன் கார்டு விண்ணப்பிப்பதற்கு ஆவணங்கள் தேவைப்படுகிறது.

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள் :

  • ஆதார் அட்டை
  • மொபைல் எண்
  • உங்கள் வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களின் பாஸ்போர்ட் அளவு போட்டோ
  • பான் கார்டு
  • வீட்டின் மின்சார கட்டணம்
  • உங்கள் வருமான சான்றிதழ்
  • சாதி/வகை சான்றிதழ்
  • வங்கி பாஸ்புக் மற்றும் உங்கள் பாஸ்புக்கின் முதல் பக்கத்தின் நகல்
  • கேஸ் சிலிண்டர் இணைப்பு விவரங்கள் BPL- இது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு வழங்கப்படுகிறது.
  • APL- வறுமைக் கோட்டுக்கு மேல் மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது.
  • AAY- இந்த ரேஷன் கார்டு அந்தியோதயா திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது மற்றும் மற்ற வர்க்க மக்களை விட பொருளாதாரத்தில் பலவீனமானவர்களுக்கு வழங்கப்படுகிறது.
  • AY- அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் கீழ் மக்களுக்கு இந்த ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது மேலும் ஒவ்வொரு மாதமும் 10 கிலோ அரிசி விலை இல்லாமல் வழங்கப்படுகிறது. நபர் 65 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் மற்றும் எந்த வருமான ஆதாரமும் இருக்கக்கூடாது.

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு அரசின் உணவுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்லுங்கள்.

அதன் பிறகு Food Security பிரிவுக்கு செல்லுங்கள். இப்போது உள்ளே நுழைந்து புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கவும்.

இங்கே நீங்கள் விண்ணப்ப படிவத்தை கிளிக் செய்து தேவையான அனைத்து விவரங்களையும் பிழையின்றி நிரப்புங்கள். தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றுங்கள்.

ஆவணங்களைப் பதிவேற்றிய பிறகு SUBMIT என்பதைக் கிளிக் செய்யுங்கள். இங்கே நீங்கள் ரேஷன் கார்டின் விண்ணப்ப எண்ணைப் பெறுவீர்கள். அதிலிருந்து விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் சரிபார்க்கலாம்.

ரேஷன் கார்டை எப்படி பதிவிறக்கம் செய்வது?

உணவுத் துறை அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று Citizen Corner பகுதியை க்ளிக் செய்யுங்கள்.

பிறகு Generate e-Card-ஐ க்ளிக் செய்யவும். ரேஷன் கார்டு விவரங்கள், ஆதார் எண் (வீட்டுத் தலைவரின்) / NFS ID, குடும்பத் தலைவரின் பெயர் மற்றும் வயது, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் ஆகியவை கொடுக்கப்பட வேண்டும்.

இந்த விவரங்கள் பதிவு செய்யும் போது கொடுக்கப்பட்டதைப் போலவே இருக்க வேண்டும்.

பின்னர் SUBMIT என்பதைக் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, இ-ரேஷன் கார்டு உங்கள் திரையில் காட்டப்படும்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள பதிவிறக்க விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் பதிவிறக்கவும்.

ரேஷன் கார்டுக்கு வெற்றிகரமாக விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் ரேஷன் கார்டின் விண்ணப்ப நிலையை தெரிந்துகொள்ளலாம். உணவுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று சிட்டிசன் கார்னர் பிரிவில் கிளிக் செய்யுங்கள். அதில், Track Food Security Applicationஐ க்ளிக் செய்யுங்கள். அதன் பிறகு நான்கு விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை நிரப்புங்கள். இதற்குப் பிறகு உங்கள் விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu Ration Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment