Advertisment

செல்போன் புகைப்படம் மூலம் மின்சார கட்டணம் : விளக்கம் கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி

Electric Bill Pay : மின் கட்டண மீட்டரை செல்போனில் படம் பிடித்து அதன் மூலம் மின்சார கட்டணம் எப்படி செலுத்துவது என்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
செல்போன் புகைப்படம் மூலம் மின்சார கட்டணம் : விளக்கம் கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் இனி மின்சாரக்கட்டணம் மாதந்தோறும் கணக்கிட்டு வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்படுள்ள நிலையில், தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மின்வாரிய ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று மின் அளவை எடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால்  பொதுமக்களே தங்களது மீட்டர் யூனிட் அளவை செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்து மின் கட்டணம் கட்டும்போது காட்டி பணம் செலுத்தலாம் என்று புதிதாக பதவியேற்றுள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Advertisment

சேலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் கூறுகையில், கொரோனா பரிசோதனை செய்த 24 மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நோய் தொற்று உள்ளவர்கள் குறித்து தகவல்கள் கண்கானிப்பு அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் மருத்தவமனையில் சேர்க்கப்டுவார்கள்  என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து மின்கட்டணம் குறித்து பேசிய அவர், மின்கட்டணங்கள் குறித்து ஏற்கெனவே சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி மின் கட்டணத்தை அளவிட உங்கள் வீட்டில் மின் கட்டண மீட்டரில் உள்ள யூனிட் அளவை செல்லில் புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பலாம். இது தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், ஒரு வாட்ஸ் அப் நம்பர் கொடுத்திருந்தோம். அந்த நம்பரில் அனுப்பினால் போதும்.

மின்கட்டணத்தை செலுத்தச் செல்லும்போது நீங்கள் செல்போனில் எடுத்த அந்த படத்தை எடுத்துச் சென்றால் போது. அநத புகைப்படத்தில் உள்ள யூனிட்டுக்கு ஏற்ப பணத்தை செலுத்தலாம். இதற்கு கால அவகாசம் உள்ளது. மின் கட்டணம் செலுத்தச் செல்லும்போது எடுத்துச் சென்றாலே போதுமானது என்று குறிப்பிட்டுள்ளார்.”.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment