Advertisment

16 லட்சம் வாக்குகளை அள்ளிய சீமான் கட்சி

லோக்சபா தேர்தலில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களில் 50 சதவீத இடத்தை பெண்களுக்கு ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

author-image
kumaranbabu tk
புதுப்பிக்கப்பட்டது
New Update
16 லட்சம் வாக்குகளை அள்ளிய சீமான் கட்சி

சீமானின் நாம் தமிழர் கட்சி, இந்த லோக்சபா தேர்தலில், 16 லட்சத்து 29 ஆயிரத்து 771 வாக்குகள் பெற்றுள்ளது. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 3.86 சதவீதம் ஆகும்.

Advertisment

நாம் தமிழர் கட்சி, கடந்த 2010ம் ஆண்டில் துவங்கப்பட்டது. திரைப்பட இயக்குனரும் மற்றும் நடிகருமான சீமான், மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து கட்சியை நடத்தி வருகிறார். 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் முதல்முறையாக நாம் தமிழர் கட்சி களம் கண்டது. யாருடனும் கூட்டணி வைக்காமல், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி முன்னணி கட்சியினரையே நாம் தமிழர் கட்சி திரும்பி பார்க்க வைத்தது. இந்த தேர்தலில், நாம் தமிழர் கட்சி 1.1 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.

கடந்த சட்டசபை தேர்தலில் 6 வது இடத்தில் இருந்த நாம் தமிழர் கட்சி, அதே உற்சாகத்துடன் லோக்சபா தேர்தலை எதிர்கொண்டது. தேர்தல் முடிவுகள், மே 23ம் தேதி வெளியான நிலையில், 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சீமானின் கனவு விரைவில் நனவாகும்!!!

வடசென்னை தொகுதியில் காளியம்மாள் 60515 வாக்குகள் ( 6.33 சதவீதம்)

மத்திய சென்னை தொகுதியில் டாக்டர்.ஆர்.கார்த்திகேயன் 30886 வாக்குகள் ( 3.93 சதவீதம்)

தென் சென்னை தொகுதியில் ஷெரீன் 50222 வாக்குகள் ( 4.46 சதவீதம்)

கோவை தொகுதியில் எஸ்.கல்யாணசுந்தரம் 60519 வாக்குகள் (4.84 சதவீதம்)

பொள்ளாச்சி தொகுதியில் சனுஜா 31483 வாக்குகள் (2.91 சதவீதம்)

திருப்பூர் தொகுதியில் பி.ஜெகந்நாதன் 42189 வாக்குகள் (3.77 சதவீதம்)

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மகேந்திரன் 84979 வாக்குகள் (6.04 சதவீதம்)

ஈரோடு தொகுதியில் சீதாலட்சுமி 39010 வாக்குகள் (3.65 சதவீதம்)

சேலம் தொகுதியில் ராசா 33890 வாக்குகள் (2.7 சதவீதம்)

மதுரை தொகுதியில் பாண்டியம்மாள் 42901 வாக்குகள் ( 4.22 சதவீதம்)

திருவள்ளூர் தொகுதியில் வெற்றிச்செல்வி 65416 வாக்குகள் ( 4.65 சதவீதம்) மற்றும்

புதுவை யூனியன் பிரதேச லோக்சபா தொகுதியில் சர்மிளா பேகம் 22857 வாக்குகள் ( 2.89 சதவீதம்)

பெற்று நான்காம் இடத்தை தக்கவைத்துள்ளனர்.

இந்த லோக்சபா தேர்தலில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களில் 50 சதவீத இடத்தை பெண்களுக்கு ஒதுக்கியுள்ளது.

Seeman Naam Tamilar Katchi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment