கழிவறை வசதி இல்லாத அரசு அலுவலகம்; பெண் அதிகாரி மரணம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் செயல்பட்டு வரும், அரசு வேளாண்மை விரிவாக்க மையம் மையத்தில், இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தவர் சரண்யா (24). மாற்றுத்திறனாளியான இவர், கிடங்கு மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில்,  வேளாண்மை விரிவாக்க மையத்தில் கழிவறை வசதி இல்லாத காரணத்த்தால், அங்கு பணியாற்றும் ஊழியர்கள்…

By: Updated: December 19, 2020, 11:28:37 AM

புதுடெல்லி:

காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் செயல்பட்டு வரும், அரசு வேளாண்மை விரிவாக்க மையம் மையத்தில், இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தவர் சரண்யா (24). மாற்றுத்திறனாளியான இவர், கிடங்கு மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில்,  வேளாண்மை விரிவாக்க மையத்தில் கழிவறை வசதி இல்லாத காரணத்த்தால், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அருகிலுள்ள மற்றொரு வீட்டில் கழிவறைக்கு செல்வது வழக்கும்.

இந்நிலையில், கடந்த 5-ந் தேதி தொடர் மழை காரணமாக அப்பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி உள்ளது. அப்போது கழிவறை செல்வதற்காக வெளியே வந்த சரண்யா அருகில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு செப்டிங் டேங்க் மீது கால் வைத்த அவர், அந்த டேங்க் மூடியிருந்து ஓடு உடைந்து உள்ளே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு அலுவலகத்தில் கழிப்பறை வசதி இல்லாததால், அருகில் உள்ள வீட்டிற்கு சென்ற ஒரு ஊழியர் செப்டிக் டேங்கில் விழுந்து பலியான சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்து. இந்த புகாரை தொடர்ந்து, விசாரணை குழு அமைத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆறுவராத்திற்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் அரசாங்க அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை வழங்க தவறிய அரசுக்குக்கு எதிராகவும், அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Human rights commission notice to tamil nadu government237913

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X