Advertisment

கோடையை எப்படி சமாளிக்கப் போகிறது தமிழகம்? 24 மாவட்டங்கள் வறட்சியில் தவிப்பதாக அறிவிப்பு...

இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hydro-logical Drought hit 24 tamil nadu districts

Hydro-logical Drought hit 24 tamil nadu districts

Hydro-logical Drought hit 24 tamil nadu districts : வடகிழக்குப் பருவமழை போதுமான அளவு இம்முறை தமிழகத்திற்கு கிடைக்காததன் விளைவாக பல்வேறு மாவட்டங்கள் வறட்சியில் தவித்து வருகின்றன.  இந்நிலை ஏப்ரல் மற்றும் மே மாதம் மோசமடையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

24 மாவட்டங்களில் உள்ள 12,524 கிராமங்கள், 143 பஞ்சாயத்து யூனியன்கள், 14,333 வாழ்விடங்கள் மோசமான அளவு பாதிப்பை சந்தித்துள்ளன. மே மாதம் இதன் எண்ணிக்கை அப்படியே இரட்டிப்பாகும் அபாயம் அதிகரித்துள்ளது.

சென்னைக்கு குடிநீரை வழங்கும் ஏரிகளிலும் நிலைமை மோசமாகவே உள்ளது. 12,722 mcft முழுக் கொள்ளளவு கொண்ட நீர்நிலைகளின் ஜனவரி மாத நீரின் இருப்பு 2,441 mcft. கடந்த ஜனவரியில் 5,352 mcft அளவு தண்ணீர் இருந்தது குறிப்பிடத் தக்கது.

வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட 24 மாவட்டங்கள்

சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், சேலம், வேலூர், திருச்சி, பெரம்பலூர், திருவள்ளூர், புதுக்கோட்டை, நாமக்கல், காஞ்சிபுரம், விருதுநகர், திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு வழியான வறட்சி நிலவும் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் 6 இடங்களிலும், திருப்பூரில் 9 இடங்களிலும், கன்னியாகுமரியில் 6 இடங்களிலும், தூத்துக்குடியில் 6 இடங்களிலும், தேனி, கோவை ஆகிய மாட்டங்களில் தலா 5 இடங்களிலும், நீலகிரியில் 1 இடத்திலும் வறட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.

மேலும் படிக்க : கால்நடைகளுக்காக குடும்பம் குடும்பமாக கிராமங்களை விட்டு வெளியேறும் மனிதர்கள் – வறட்சியின் பிடியில் மகாராஷ்ட்ரா

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment