சென்னை ஐ.ஐ.டி பெண்கள் 'ரெஸ்ட் ரூமில்’ செல்போன்... படம் பிடிக்க முயற்சித்த ஊழியர் கைது?

கேமராவில் வீடியோ பதிவுகள் ஓடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

IIT Madras professor held for secretly placing phone inside women’s toilet : மெட்ராஸ் ஐ.ஐ.டி. ஒன்று  தற்கொலைக்கு பெயர் போனதாக இருக்கிறது. இல்லையென்றால் அதைவிட ஏதாவது ஒரு அதிர்ச்சி நிகழ்வு நடந்து ஹெட்லைனில் வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.

சென்னை ஐ.ஐ.டியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊழியர் ஒருவர் (Project Employee ), பெண்களின் ரெஸ்ட்ரூமில் யாருக்கும் தெரியாமல் மறைமுக செல்ஃபோனை வைக்க முயற்சி செய்துள்ளார். புதன் கிழமை, பி.எச்டி படிக்கும் மாணவி ஒருவர் ரெஸ்ட் ரூம் சென்ற போது, அவருக்கு நேர் எதிரே இருந்த ஜன்னலில் செல்ஃபோன் வைக்கப்பட்டிருந்தை கண்டறிந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

அதன் அருகே சென்று அதனை எடுத்து பார்வையிட்ட போது அதில் செல்ஃபோன் ஆன் செய்யப்பட்டு, கேமராவில் வீடியோ பதிவுகள் ஓடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறிய அவர் ஆண்கள் கழிப்பறையினை வெளிப்புறமாக தாழிட்டு அங்கிருந்த செக்யூரிட்டிகளை வர கூறியுள்ளார்.

அந்த ரெஸ்ட்ரூமை திருந்த போது, ஐ.ஐ.டியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊழியர் சுபம் பானர்ஜீ உள்ளே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக உடனே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க : கோவையைப் போல சேலத்திலும் சோகம்: ஆம்னி பஸ் விபத்தில் 6 பேர் பலி

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close