‘தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துங்கள்’ – பாக்ஸ்கானுக்கு பறந்த தமிழக அரசின் அட்வைஸ்

நிறுவனத்தில் பணிபுரியும் 15 ஆயிரம் தொழிலாளர்களுக்கும் தரவான உணவு வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என பாக்ஸ்கான் நிறுவனத்திடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

தைவானைச் சேர்ந்த எலக்ட்ரானிக் உபகரண நிறுவனமான பாக்ஸ்கான், சென்னையில் உள்ள ஒப்பந்த ஊழியர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தித்தர தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை பாக்ஸ்கானில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் விடுதி உணவின் தரம் மற்றும் குறைபாடுகளை சரிசெய்யக்கோரி கடந்த 18ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக எடுக்கப்பட்டுள்ளது.

தொழில்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ச.கிருஷ்ணனும், காவல்துறை சட்டம்-ஒழுங்கு
கூடுதல் இயக்குநர் பி.தாமரைக்கண்ணனும் ஆகியோர் டிசம்பர் 23 அன்று பாக்ஸ்கான் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு ஊழியர்களின் அறைகள், கழிவறைகளின் தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் உட்பட பல பரிந்துரைகளை பட்டியலிட்டு கடிதம் அனுப்பினர். அவை பின்வருமாறு:

  • ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களின் பணிபுரியும் சூழ்நிலைகளை மேம்படுத்தித்தர வேண்டும்.
  • தங்கும் விடுதிகளின் தரத்தை உயர்த்தித்தர வேண்டும். தேவையான இடவசதி, குளியல் அறை, கழிவறை, குடிதண்ணீர், காற்றோட்டமான அறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதர வேண்டும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித்தர வேண்டும்.
  • தொழிலாளர்கள் தங்கும் விடுதிக்கு மாவட்ட ஆட்சியரிடம் உரிய தரச்சான்று பெற வேண்டும்.
  • தங்கும் இடத்திலேயே சமையலறை அமைத்துத் தரமான உணவுகளைச் சமைத்து, உரிய நேரத்தில் வழங்க வேண்டும்.
  • ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவசர நிமித்தம் காரணமாக விடுப்புக் கேட்கும்போது வழங்க வேண்டும். விடுப்பில் செல்லும் தொழிலாளர்களுக்கு மாற்றாக தேவையான தொழிலாளர்களை மனிதவள முகமைகள் (Manpower Agency) செய்து தர ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக, நிறுவனத்தில் பணிபுரியும் 15 ஆயிரம் தொழிலாளர்களுக்கும் தரவான உணவு வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என பாக்ஸ்கான் நிறுவனத்திடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Improve amenities for staff tamil nadu tells foxconn

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com