Advertisment

”18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க நடவடிக்கையின் பின்புலத்தில் மத்திய அரசு இல்லை”: தமிழிசை கருத்து

எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டிருக்கும் நடவடிக்கையின் பின்புலத்தில் மத்திய அரசு இல்லை என, தமிழிசை தெரிவித்தார்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
AIADMK, 18 MLAs disqualified, Speaker Dhanapal, 18 MLAs, TTV Dinakaran, CM Edappadi Palanisamy, Tamilnadu government,TAMILISAI SOUNDARARAJAN

டி.டி.வி. தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டிருக்கும் நடவடிக்கையின் பின்புலத்தில் மத்திய அரசு இல்லை என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

Advertisment

டிடிவி.தினகரன் அணியை சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் ஆகஸ்ட் 17-ம் தேதி கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக கடிதம் அளித்தனர். இதையடுத்து, அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அரசு கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்தார்.

அதை ஏற்று சபாநாயகர் தனபால், மேற்படி 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். அப்போது புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த 19 எம்.எல்.ஏ.க்களில் ஓரிருவர் மட்டும் நேரில் வந்து அவர்கள் தரப்பு விளக்கத்தை கொடுத்தனர். அதை ஏற்காத சபாநாயகர் தனபால், செப்டம்பர் 14-ம் தேதி 19 பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மீண்டும் நோட்டீஸ் அனுப்பினார்.

இதனிடையே, டிடிவி அணியில் இருந்த கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், இபிஎஸ் அணிக்கு தாவினார். சபாநாயகர் தனபாலை சந்தித்தும் அவர் விளக்கம் கொடுத்தார். எனவே வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 பேர் மீது எந்த நேரமும் சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையே கடந்த 10-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், டிடிவி அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடியாக உத்தரவிட்டார். அரசியல் சட்டம் 10-வது அட்டவணைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் தனபால் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “மக்கள் பிரதிநிதிகள் போல் செயல்படாத 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க நடவடிக்கையின் பின்புலத்தில் மத்திய அரசு இல்லை”, என தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால், தமிழக அரசியல் சூழலில் நிகழும் சம்பவங்களுக்கு மத்திய பாஜக அரசே காரணம் என, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Tamilisai Soundararajan Speaker Dhanapal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment