Advertisment

ஒரே நபரிடம் இருந்து 54 பேருக்கு கொரோனா: சென்னை அரசு மருத்துவமனை ஷாக்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர் உள்ளிட்ட 18 பேர் உட்பட 54 பேருக்கு கொரோனா உறுதி – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

author-image
WebDesk
New Update
Tamil News Highlights: தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,580 பேருக்கு கொரோனா; 22 பேர் உயிரிழப்பு

Including health staffs 54 tests positive to corona in RGGGH from one: சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சியிலுள்ள ஏழு பயிற்சி மருத்துவர்கள், ஏழு நர்சிங் மாணவர்கள், இரண்டு செவிலியர்கள், ஒரு முதுகலை மருத்துவ மாணவர் மற்றும் ஒரு சுகாதார பணியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Advertisment

அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள வசதிகளை நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், பாதிப்பு அதிகரித்தால் சமாளிக்க, இங்கு 2,050 படுக்கைகள், அவற்றில் 1,522 ஆக்ஸிஜன் வசதிகள் மற்றும் 550 ஐசியூ படுக்கைகள் ஆகியவை தயாராக வைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

மேலும், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட 18 பேர் உட்பட 54 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு ஓமிக்ரான் தொற்று என்று சந்தேகிக்கப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்ய உள்ள நோயாளிடம் இருந்து இவர்களுக்கு பரவியுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரின் உடல்நிலையும் சீராக உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அறுவை சிகிச்சைக்கு, நோயாளி அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, நோயாளி நெறிமுறையின்படி அவர் சோதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு, டிசம்பர் 18 முதல் அவரது தொடர்புகளில் 3,038 பேர் கண்டறியப்பட்டு சோதனை செய்யப்பட்டனர், அவர்களில் 54 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதில், 39 பேருக்கு எஸ்-ஜீன் மாறுபாடு உள்ளது, இது ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது, மேலும் அவற்றின் மாதிரிகள் முழு மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை தெரிவித்தார்.

கொரோனா தொற்று பாதித்த நடிகர் வடிவேலு மற்றும் அவரது தொடர்புகளில் அறிகுறியற்ற பாதிப்புடைய இருவரும் நன்றாக குணமடைந்து வருவதாக அமைச்சர் கூறினார்.

இதற்கிடையில், ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த 7 பேர் உட்பட 12 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் 16 வது மெகா தடுப்பூசி இயக்கத்தை முன்னிட்டு, தமிழகத்தில் 94 லட்சம் பேர் இரண்டாவது டோஸ் எடுக்க வேண்டியுள்ளது என்று அமைச்சர் கூறினார். "ஒமிக்ரானைத் தடுப்பது முக்கியம் என்பதால், இந்த நபர்கள் தடுப்பூசி போடுவது முக்கியம். தற்போது, ​​85 சதவீதம் பேர் முதல் டோஸ் பெற்றுள்ளனர், 55 சதவீதத்துக்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்,'' என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment