சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மணல் குவாரி, குத்தகைதாரர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றன.ர்
இந்நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கம், மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது. வசுத்ரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளர் நீலகண்டனுக்கு சொந்தமான கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடைபெற்று வருவதாகவும், சென்னை நுக்கம்பாக்கம்,
மண்ணடியில் உள்ள தொழிலதிபர் வீடுகளிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை தி. நகர், கோபாலபுரம், கே.கே நகர் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகின்றது.
பெங்களூரிலிருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை அதிகாரிகளின் உதவியுடன் இந்தச் சோதனையை நடத்தி வருவதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“