scorecardresearch

சசிகலா குடும்பத்தினரை வளைத்த வருமான வரித்துறை! ரெய்டு இடங்களின் பட்டியல்

சசிகலா குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 187 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சசிகலா குடும்பத்தினரை வளைத்த வருமான வரித்துறை! ரெய்டு இடங்களின் பட்டியல்

சசிகலா குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 187 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வெளிமாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் உள்பட 1800 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடைபெறும் முக்கிய இடங்களின் பட்டியல் இதோ…

 

1. இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா வீடு – தி.நகர்

2. ஜெயா தொலைக்காட்சி அலுவலகம் – ஈக்காட்டுத்தாங்கல்

3. டிடிவி தினகரன் வீடு – பெசண்ட் நகர்

4. கோடநாடு எஸ்டேட்

5. மிடாஸ் மதுபான ஆலை – படப்பை

6. சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் வீடு – நாமக்கல்

7. திவாகரனுக்குச் சொந்தமான செங்கமலத்தாயார் கலை அறிவியல் கல்லூரி – மன்னார்குடி

8. ஜெயா டிவி பழைய அலுவலகம் – போயஸ் கார்டன்

9. ஜாஸ் சினிமாஸ் கார்ப்பரேட் அலுவலகம் – கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்

10. ஜான் சினிமாஸ் – வேளச்சேரி ஃபீனிக்ஸ் மால்

11. சசிகலாவின் கணவர் நடராஜன் வீடு – தஞ்சை அருளானந்த நகர்

12. சசிகலாவின் அண்ணன் மகாதேவன் வீடு – தஞ்சை

13. சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ் வீடு – தஞ்சை டு புதுக்கோட்டை சாலை

14. திவாகரனின் உதவியாளர் விநாயகம் வீடு – கீழதிருப்பாலக்குடி (திருவாரூர்)

15. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி வீடு – பெங்களூரு

16. சசிகலா சகோதரர் திவாகரன் வீடு – சுந்தரக்கோட்டை (மன்னார்குடி)

17. தினகரன் வீடு – மன்னை நகர் (மன்னார்குடி)

18. நமது எம்.ஜி.ஆர். அலுவலகம்

19. தினகரன் பண்ணை வீடு – புதுச்சேரி

20. கோடநாடு எஸ்டேட் கணக்கை நிர்வகிக்கும் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி – ஈளடா (நீலகிரி)

21. ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவக்குமார் – நீலாங்கரை

22. கர்நாடக மாநில தலைமை அலுவலகம் – பெங்களூரு

23. ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் – நேரு நகர் (அடையாறு)

24. விவேக் ஜெயராமன் வீடு – மகாலிங்கபுரம்

25. திவாகரன் நண்பர் ஓய்வுபெற்ற வேளாண் இயக்குநர் நடேசன் – திருத்துறைப்பூண்டி

26. நடராஜனின் சகோதரி மகன் வெங்கடேஷ் – அருளானந்தம் நகர் (தஞ்சை)

27. சசிகலா அண்ணன் வினோதகனின் மகனான தங்கமணி – தஞ்சை

28. டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பாலுச்சாமி – நாமக்கல்

29. திவாகரன் நண்பர் தமிழ்ச்செல்வன் – ரிஷியூர்

30. கோடநாடு பங்களாவில் மரவேலை பார்த்துவந்த சஜிவன் அலுவலகம் – கோவை

31. தினகரனின் சகலை டாக்டர் சிவகுமார் – திருச்சி ராஜா காலனி

32. டிடிவி தினகரனுக்குச் சொந்தமான காகித ஆலை – கொத்தமங்கலம் (ஈரோடு)

33. செந்தில் குரூப் ஆஃப் கம்பெனீஸ் – ராம் நகர் (கோவை)

34. செந்தில் வணிக வளாகம் – அவிநாசி (கோவை)

35. மணல் குவாரிகளை குத்தகை எடுத்து நடத்திவந்த ஆறுமுகசாமி அலுவலகம் – கோவை

36. சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் – செளகார்பேட்டை

37. தினகரன் அணியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் வீடு – அறந்தாங்கி

38. சசிகலா உறவினர் பரணி கார்த்திகேயன் வீடு – நெற்குப்பை

39. திவாகரனின் செங்கமலத்தாயார் கல்லூரி ஊழியர் அன்பு வீடு

40. சசிகலாவின் உறவினர் கலியபெருமாள் வீடு – மங்கம்மாள் நகர் (திருச்சி)

41. திவாகரனின் உதவியாளர் முன்னாள் கவுன்சிலர் ராசுபிள்ளை வீடு – மன்னார்குடி

42. டிடிவி அணியின் தஞ்சை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு கார்த்திகேயன் வீடு

43. திவாகரன் ஆதரவாளர் அக்ரி ராஜேந்திரன் – வடுவூர்

44. திவாகரன் ஆதரவாளர் சுஜய் வீடு

45. திவாகரன் ஆதரவாளர் செல்வம் வீடு

46. தினகரன் அணியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ்

47. திவாகரனுக்குச் சொந்தமான பண்ணை வீடு – ரிஷியூர்

48. விவேக் ஜெயராமன் மாமனார் பாஸ்கர் – அண்ணா நகர் (சென்னை)

49. தினகரனின் உதவியாளர் ஜனா வீடு – கே.கே. நகர் (சென்னை)

50. சசிகலாவுக்குச் சொந்தமான கர்சன் எஸ்டேட் – கோடநாடு

(பட்டியல் நீள்கிறது)

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Income tax raid sasikalas home and office